அரியானா கிராமத்தில் பரவும் மர்ம காய்ச்சல்: 10 நாட்களில் 8 குழந்தைகள் பலி

அரியானாவின் சில்லி என்ற சிறிய கிராமத்தில் பரவிய இந்த மர்ம காய்ச்சல் மக்களிடையே பீதியைக் கிளப்பி வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 16, 2021, 10:42 AM IST
  • அரியானாவின் பல்வல் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பரவி வருகிறது மர்ம காய்ச்சல்.
  • மர்ம காய்ச்சல் மக்களிடையே பீதியைக் கிளப்பியுள்ளது.
  • பாதிக்கப்பட்ட 44 பேரில், 35 பேர் சிறார்கள்.
அரியானா கிராமத்தில் பரவும் மர்ம காய்ச்சல்: 10 நாட்களில் 8 குழந்தைகள் பலி title=

சண்டிகர்: அரியானாவின் பல்வல் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பரவி வரும் மர்ம காய்ச்சல் இதுவரை எட்டு குழந்தைகளை பலியாக்கியுள்ளது. கிராம பஞ்சாயத்து தலைவர் நரேஷ் குமார் இதை உறுதிப்படுத்தினார்.

அரியானாவின் (Haryana) சில்லி என்ற சிறிய கிராமத்தில் இந்த மர்ம காய்ச்சல் பரவி மக்களிடையே பீதியைக் கிளப்பி வருகிறது. அங்கு மொத்தம் 44 பேருக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதாக பதிவாகியுள்ளது. 44 பேரில், 35 பேர் சிறார்கள். இவர்கள் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எட்டு குழந்தைகள் இறந்ததற்கான காரணம் இன்னும் சுகாதார அதிகாரிகளால் உறுதியாக கண்டறியப்படவில்லை. பலருக்கு குறைந்த அளவிலான பிளேட்லெட்டுகள் மற்றும் காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் இருப்பதால், இது டெங்கு காய்ச்சலாகவும் இருக்கலாம் என்ற சந்தேகமும் அதிகாரிகளுக்கு இருக்கின்றது. சுகாதார அதிகாரிகள் கிராம மக்களின் வீடுகளுக்கு சென்று தூய்மையை பேணுவது மற்றும் டெங்கு காய்ச்சல் போன்ற சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை பரப்பி வருகின்றனர். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் கோவிட், டெங்கு மற்றும் மலேரியாவுக்கு பரிசோதிக்கப்படுகிறார்கள்.

ALSO READ: சமூக ஊடகத்தில் COVID-19 வதந்திகள்; உலகில் முதலிடம் வகிக்கும் இந்தியா..!!

விஜய் குமார், எஸ்எம்ஓ ஹாதின், "குழந்தைளுக்கு இடையில் காய்ச்சல் பரவுவதையும் சில குழந்தைகள் இறந்த செய்தியையும் அறிந்தோம். நாங்கள் கிராமவாசிகளின் வீடுகளுக்கு சென்று வருகிறோம். ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. மருந்துகள் விநியோகிக்கப்படுகின்றன. மருத்துவ குழு 24 மணி நேரமும் வேலை செய்கிறது. இங்குள்ள சுகாதார நிலை மோசமாக இருப்பதையும் நாங்கள் கவனித்தோம். காய்ச்சலுக்கான காரணங்களைக் கண்டறிய நாங்கள் கூடுதல் சோதனைகளை செய்து வருகிறோம்” என்று கூறினார்.

மர்ம காய்ச்சலால் (Fever) பல பெரியவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காய்ச்சலும், குறைந்த பிளேட்லெட்டுகளின் அளவும்தான் இறப்புகளுக்கு காரணம் என கிராமவாசிகள் நம்புகின்றனர். கிராமத்தில் சுகாதார வசதிகள் குறைவாக இருப்பதாக கிராம வாசிகள் கருதுகின்றனர்.

“இதுவரை 7-8 குழந்தைகள் இறந்துள்ளனர். இது அசுத்தமான நீர் மற்றும் தேங்கி நிற்கும் தண்ணீரில் சேர்ந்துள்ள பாசி ஆகியவற்றின் காரணமாகவும் இருக்கலாம். 15-20 நாட்களாக இந்த நிலைமை நீடிக்கின்றது. அவர்களுக்கு டெங்கு பரிசோதனை செய்யப்படவில்லை. சுகாதார குழு இப்போதுதான் இங்கே வந்துள்ளது. ஆஷா தொழிலாளர்களும் அவர்களது மையங்களுக்குதான் வருகிறார்கள், கிராமத்துக்குள் வருவதில்லை. இங்கு சுகாதார வசதி முற்றிலும் இல்லை” என்றார் குமார்.

மறுபுறம், வைரல் காய்ச்சல்களிலும் (Dengue Fever) பிளேட்லெட் எண்ணிக்கை குறையும் வாய்ப்புள்ளதாக  அதிகாரிகள் கூறியுள்ளனர். 4,000 மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் முறையான சுகாதார வசதி இல்லை. சுகாதார நிலையும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

ALSO READ: 100 நாள் வேலைத் திட்டத்தில் இதெல்லாம் பண்ணலாமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News