ரத்தன் டாட்டா கால்தொட்டு ஆசிபெற்ற இன்போசிஸ் நாராயணமூர்த்தி

இன்போசிஸ் நிறுவனரான நாராயணமூர்த்தி, ரத்தன் டாட்டாவின் காலில் விழுந்து ஆசிபெற்ற காட்சி, இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Last Updated : Jan 30, 2020, 11:47 AM IST
ரத்தன் டாட்டா கால்தொட்டு ஆசிபெற்ற இன்போசிஸ் நாராயணமூர்த்தி title=

இன்போசிஸ் நிறுவனரான நாராயணமூர்த்தி, ரத்தன் டாட்டாவின் காலில் விழுந்து ஆசிபெற்ற காட்சி, இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

மும்பையில் ஆண்டுதோறும் நடைபெறும் டைகான் நிகழ்ச்சியில் இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி, தொழிலதிபர் ரத்தன் டாட்டா ஆகிய இரு முக்கிய தொழிலதிபர்களும் பங்கேற்றனர். இந்த நிகழ்வில், நாராயணமூர்த்தி, ரத்தன் டாடாவுக்கு விருது வழங்கினார்.

விருது வழங்கிய பின்னர், குனிந்து அவருடைய கால்கலைத் தொட்டு வணங்கி மரியாதை செய்தார். இந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட வீடியோவை ரத்தன் டாட்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அந்த வீடியோவில், 73 வயதான நாராயண மூர்த்தி 82 வயதான ரத்தன் டாட்டாவுக்கு விருது வழங்கிய பின்னர், குனிந்து அவருடைய கால்களைத் தொட்டு வணங்கி மரியாதை செய்கிறார்.

 

 

சமூகவலைதளங்களில் இந்தப் படத்தைப் பகிர்ந்துள்ள பலரும் இரு தொழிலதிபர்களையும் வெகுவாகப் புகழ்ந்துள்ளனர்.

Trending News