ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றது., தற்போதைய நிலவரப்படி இம்மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!
17-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி மே 19-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவானது நடைபெற்றது.
மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரப் பிரதேசம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய நான்கு மாநில சட்டசபை தேர்தலும் நடைப்பெற்றுள்ளது.
அந்த வகையில் 147 இடங்களை கொண்ட ஒடிசா மாநிலத்தில் நான்கு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடந்தது. பிஜு ஜனதா தளம், காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகியவை தனித்தே போட்டியிட்டன. இதில் காங்கிரஸ் 139 தொகுதிகளில் போட்டியிட்டது.
தற்போதைய நிலவரப்படி இத்தொகுதியில் பிஜூ ஐனதா தளம் 64 தொகுதிகளிலும், பாஜக 18 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. ஏனவே இத்தொகுதியில் நவீன் பட்யாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.