NEET PG 2022: இந்த தேதியில் வெளியாகிறதா ஹால் டிக்கெட்

NEET PG 2022 விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வு மையத்திற்குள் நுழையும்போது ஹால் டிக்கெட் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 10, 2022, 01:14 PM IST
  • NEET PG 2022 நுழைவு தேர்வு
  • nbe.edu.in மற்றும் natboard.edu.in மூலம் ஹால் டிக்கெட் பெறலாம்
  • மே 21, 2022 அன்று தேர்வு நடத்தப்படும்.
NEET PG 2022: இந்த தேதியில் வெளியாகிறதா ஹால் டிக்கெட் title=

தேசிய அளவில், பொது மருத்துவம் பல் மருத்துவம் ஆகிய படிப்பில் சேர்வதற்காக நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு - என்ற தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. 2013 மே 5ம் தேதி முதல் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தேர்வை, முன்பு நடுவண் இடைக்கல்வி வாரியம் நடத்தியது. கடந்த 2019ம் ஆண்டு முதல் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் எம்.டி., எம்.எஸ் படிப்புகளில் சேர நடத்தப்படும் முதுநிலை நீட் தேர்வு வரும் மே 21 ஆம் தேதி நடைபெறயுள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு வாரியம் வெளியிட உள்ளது. அதன்படி இந்த ஹால் டிக்கெட் வெளியிடப்பட்ட பிறகு தேர்வர்கள், அதிகாரப்பூர்வ இணையதளங்களான nbe.edu.in மற்றும் natboard.edu.in மூலம் பதிவிறக்கலாம். 

மேலும் படிக்க | டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் தேவை: அன்புமணி

இதற்கிடையில் ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்படும் தேதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும், அவை இந்த வாரம் மே 16 அல்லது 17க்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே 21 ஆம் தேதி நடத்தப்படும் தேர்வு மூலம், விண்ணப்பதாரர்கள் தேதிக்கு குறைந்தது 4 முதல் 5 நாட்களுக்கு முன்பே தங்கள் அட்மிட் கார்டுகளைப் பெறுவார்கள். நீட் 2022 நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டதும், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

நீட் 2022 அட்மிட் கார்டைப் பதிவிறக்கம் செய்யக்கூடிய படிப்படியான செயல்முறை இங்கே உள்ளது.

படி 1 : முதலில் தேர்வர்கள் nbe.edu.in அல்லது natboard.edu.in பக்கத்திற்கு செல்லவும்.
படி 2 : நீட் பிஜி 2022 பட்டனை கிளிக் செய்யவும்.
படி 3 : அடுத்த பக்கத்தில் காணப்படும், "நீட் பிஜி 2022 ஹால் டிக்கெட்" என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.
படி 4 : இப்போது, தேவையான விவரங்களை உள்ளிட்டு உள்நுழையவும்.
படி 5 : இப்போது, உங்கள் ஹால் டிக்கெட் திரையில் காண்பிக்கப்படும்.
படி 5 : அதை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

முன்னதாக மே 21 ஆம் தேதி நடைபெறயுள்ள முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க பல்வேறு தரப்பினர் கோரினர் வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று ஜூலை 9 ஆம் தேதிக்கு முதுநிலை நீட் தேர்வு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தகவல்கள் இணையத்தில் வெளியாகியது.

ஆனால் தேசிய தேர்வு வாரியம் இது குறித்து கூறியபோது., முதுகலை நீட் தேர்வு ஒத்திவைக்கப் பட்டுள்ளது என்று இணையத்தில் பரவும் தகவல் போலியானது. திட்டமிட்டபடி மருத்துவப் படிப்புகளக்கான நீட் தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெறும். சமூக வலைதளங்களில் பரவும் போலியான தகவல்களை யாரும் நம்பவேண்டாம் என்று தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 9,494 காலிப் பணியிடங்கள் - TRB வெளியிட்ட அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News