நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 20 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் ஆணை!!
டெல்லி: நாட்டை உலுக்கிய தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவியின் நிர்பயா கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் மார்ச் 3 ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தது. ஆனால், குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா ஜனாதிபதியிடம் கருணை மனுவை தாக்கல் செய்திருந்தார். ஜனாதிபதியிடம் தனது கருணை மனு நிலுவையில் இருப்பதால் தூக்குதண்டனையை தள்ளிவைக்கும்படி டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், பவன் குமார் குப்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை ஜனாதிபதி நேற்று நிராகரித்தார். ஏற்கனவே, மூன்று குற்றவாளிகளின் கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவதை காலம் தாழ்த்த கடைசி வாய்ப்பாக இருந்த குற்றவாளி பவன் குமாரின் மனுவையும் ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
Nirbhaya Case: Delhi Court issues a fresh death warrant against the four convicts. They are to be hanged at 5.30 am on March 20, 2020 pic.twitter.com/MAOx5rVVGw
— ANI (@ANI) March 5, 2020
இதை தொடர்ந்து திஹார் சிறை நிர்வாகம் டெல்லி நீதிமன்றத்தை அணுகி, குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் போடும் புதிய தேதியை முடிவு செய்யக்கோரி, மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், டெல்லி திகார் சிறை நிர்வாகம் சார்பில் டெல்லி நீதிமன்றத்தை அணுகி குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட புதிய தேதியை டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின் படி, நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 20 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகள் முகேஷ்குமார் சிங், பவன்குமார் குப்தா, விநய் குமார் சர்மா, அக்சய குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது, 3 முறை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், நான்காவது முறையாக தற்போது டெல்லி நீதிமன்றம் புதிய தேதியை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.