புதுடெல்லி: வெவ்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசை அளிக்க மோடி அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மோடி தலைமையிலான மத்திய அரசு பெரும்பாலும், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கொள்கை என்ற நாட்டின் கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது. அதாவது ஒரு தேசம், ஒரு ஊதிய நாள் (One Nation, One Pay Day) என்ற முறையை கொண்டு வர மத்திய அரசு தயாராகி வருவதாக மத்திய தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் கங்வார் (Santosh Gangwar) கூறி உள்ளார். நாட்டின் அனைத்து ஊழியர்களும் ஒரே நாளில் சம்பளம் பெற வேண்டும் என மத்திய அரசாங்கத்தின் முயற்சியாகும். ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த முறையைச் செயல்படுத்த அரசாங்கம் செயல்பட்டு வருவதாக மத்திய தொழிலாளர் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை குறித்து பேசிய மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் கூறியது, பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய, நாடு முழுவதும் ஒரே நாளில் சம்பளத்தை வழங்க வேண்டும். இதற்காக விரைவில் ஒரு சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார் எனக் கூறினார்.
2019 ஆம் ஆண்டின் பாதுகாப்பு தலைமை உச்சி மாநாட்டில், ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அனைத்து துறைகளிலும் சமமான குறைந்தபட்ச ஊதியத்தை ஊழியர்களுக்கு வழங்க வழிவகை செய்யும் நோக்கி மத்திய அரசாங்கம் செயல்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் கூறினார்.