புதுடெல்லி / இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் ஜனாதிபதி, இந்தியாவை மிரட்டும் விதமாக பேசியுள்ளார்.
காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 370 வது பிரிவை இந்தியா வாபஸ் பெற்றதிலிருந்து, பாகிஸ்தானிய தலைவர்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர். எப்படியாவது காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகளை தலையிட செய்து, இந்தியாவை அடிபணிய வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல செயல்களை செய்து வருகிறது. ஆனால், உண்மை என்னவென்றால், உலக நாடுகள் இந்தியாவின் பக்கம் நிற்கிறது. இதனால் மேலும் கோபமடைந்த பாகிஸ்தான் என்ன செய்வது என்று தெரியாமல், பல தவறான முடிவுகளை எடுத்து வருகிறது.
அதேபோல இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோடு அருகே, பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் குழுக்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் உதவி செய்து வருகிறது. இந்த பயங்கரவாதிகளை காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு அனுப்பி, தாக்குதல் நடத்தவும், அமைதி சீர்குலைக்கவும் முயற்சியில் பாகிஸ்தான் ராணுவம் செயல்பட்டு வருகிறது என்றும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், பாகிஸ்தான் நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பாகிஸ்தானின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்லாமாபாத்தில் உள்ள ஜின்னா கன்வென்ஷன் சென்டரில் நடந்த கொடி ஏற்றும் விழாவில் உரையாற்றிய, அந்நாட்டு ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி கூறியது,
இந்தியாவுக்கு எதிராக ஜிஹாத் குழுக்கள் செயல்படும் என்று வெளிப்படையாக மிரட்டியுள்ளார். சிம்லா ஒப்பந்தத்தை இந்தியா மீறியுள்ளதாக பாகிஸ்தான் அதிபர் தெரிவித்தார். இதனால் இந்தியாவுக்கு எதிராக ஜிஹாத் இருக்க முடியும். காஷ்மீரிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து உதவி செய்யும். நாங்கள் அவர்களை எந்த சூழ்நிலையிலும் விட்டுவிட மாட்டோம். காஷ்மீரிகள் எங்கள் மக்கள், அவர்களின் வலியை எங்கள் வலியாக நாங்கள் கருதுகிறோம். ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் எனக் கூறினார்.