COVID-19 நிலைமை குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் கூட்டம்

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், கோவிட் -19  இரண்டாவது அலையை இந்தியா இன்னும் முழுமையாக கடக்கவில்லை என நேற்று கூறியிருந்தார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 10, 2021, 08:04 PM IST
  • இந்தியாவில் 24 மணி நேரத்தில் 34,973 புதிய கோவிட் -19 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன
  • கடந்த 24 மணி நேரத்தில் 260 பேர் பலி.
  • COVID-19 காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 4,42,009 ஆக உயர்ந்தது
COVID-19 நிலைமை குறித்து பிரதமர்  மோடி தலைமையில் உயர்மட்டக் கூட்டம்  title=

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 10) கோவிட் -19 நிலைமை மற்றும் நாட்டில் தடுப்பூசி போடும் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், கோவிட் -19  இரண்டாவது அலையை இந்தியா இன்னும் முழுமையாக கடக்கவில்லை என நேற்று கூறியிருந்தார். 

நாட்டில் 35 மாவட்டங்களில் இன்னும் வாராந்திர COVID நேர்மறை விகிதம், அதாவது பரிசோதனை செய்து கொண்டவர்களில் தொற்று உறுதியாகும் விகிதம் 10% என்ற அளவிற்கும் அதிகமாக உள்ளது. அது 30 மாவட்டங்களில் ஐந்து முதல் 10% வரை இருப்பதாக ராஜேஷ் பூஷண் கூறினார்.

இந்தியாவின் வயது வந்தோரில் பாதிக்கும் மேற்பட்டோர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர், அதே நேரத்தில் 18% இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர். நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 72 கோடியைத் தாண்டியதாக மத்திய அரசு வியாழக்கிழமை கூறியது.

ALSO READ | COVID-19 Update: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு நிலவரம்

இதற்கிடையில், செப்டம்பர் 10 அன்று வெளியான தரவுகளின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,973 புதிய கோவிட் -19 தொற்று பாதிப்புகள் பதிவானது, மொத்த எண்ணிக்கை 3,31,74,954 ஆக இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 260 பேர் பலியானத்தை அடுத்து மொத்த இறப்பு எண்ணிக்கை 4,42,009 ஆக உயர்ந்தது என மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

சிகிச்சையில் உள்ள COVID-19 தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,90,646 . இது மொத்த தொற்று எண்ணிக்கையில் 1.18% ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் 37,681 பேர் குஅமடைந்துள்ளனர். முணமடைந்தவர்களின் மொத்த மீட்பு எண்ணிக்கை 3,23,42,299 ஆக உள்ளது. குணமடையும் விகிதம் தற்போது 97.49%ஆக உள்ளது.

கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் தினமும் அதிகபட்ச எண்ணிக்கையிலான தொற்றுகள் பதிவாகி வருகின்றன. வியாழக்கிழமை (செப்டம்பர் 9), கேரளாவில் 26,200 புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் 125 இறப்புகள் பதிவாகியுள்ளன. 24 மணி நேரத்திற்குள் 1,56,957 மாதிரிகளை பரிசோதித்துள்ள நிலையில், மாநிலத்தின் பரிசோதனை செய்தவர்களில் தொற்று பாதிப்பு உறுதியானவர்களின் விகிதம் இப்போது 16.69% ஆக உயர்ந்துள்ளது.

ALSO READ | Today Update: தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கோவிட் பாதிப்பு நிலவரங்கள்
 

Trending News