புதுடெல்லி: சுமார் இரண்டு ஆண்டுகளில் முதன் முறையாக, ஜம்மு-காஷ்மீரின் அரசியல் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஜம்மு காஷ்மீர் அரசியலுக்கும் புது தில்லிக்கும் இடையில் இருந்த ஒரு வித மவுனத்தை கலைத்துள்ளார் பிரதமர் மோடி. இந்திய பிரதமர் ஜம்மு காஷ்மீரின் எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுக்க, வியாழக்கிழமை, ஜம்மு காஷ்மீரின் 14 தலைவர்களை சந்தித்து பேசினார்.
காஷ்மீருக்கும் தில்லிக்குமான தூரம் விலகிவிட்டது!!
ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, கூட்டத்தில், பிரதமர் மோடி ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு மீதான நம்பிக்கையை வெளிப்படுத்திய அனைத்து தலைவர்களுக்கும் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். மனங்களுக்கு இடையிலான தூரத்தையும், தில்லிக்கும் ஜம்மு காஷ்மீருக்கும் இடையிலான தூரத்தையும் முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாகவும் பிரதமர் மோடி (PM Modi) கூறினார். நம்மிடையே அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் எல்லோரும் நாட்டின் நலனுக்காக செயல்பட வேண்டும், இதனால் ஜம்மு-காஷ்மீர் பயனடையும் என அவர் கூறினார்.
PM Narendra Modi heard out suggestions and inputs from all participants. He expressed happiness that all participants shared their honest views. It was an open discussion that revolved around building a better future for Kashmir: Sources pic.twitter.com/2d1d8z67AC
— ANI (@ANI) June 24, 2021
மக்களுக்கு ஊழல் இல்லாத ஆட்சி கிடைக்கும்போது, அவர்களிடம் நம்பிக்கை உருவாக்கப்பட்டு, மக்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கிறது. இது இன்று ஜம்மு-காஷ்மீரில் தெரிகிறது என கூட்டத்தில், பிரதமர் தலைவர்களிடம் கூறியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அபிவிருத்தி பணிகள் குறித்து பிரதமர் திருப்தி தெரிவித்ததோடு, மாநில மக்களிடையே நம்பிக்கை எழுப்பப்படுவதாகவும் கூறினார்.
கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களைக் குறிப்பிட்டு பிரதமர், அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் நாட்டுக்கு பல நன்மைகளை செய்வார்கள் என குறிப்பிட்டார். ஜம்மு காஷ்மீடில் ஒரு உயிர் போவதுகூட வருத்தமளிக்கிறது என்றும் இளைஞர்களின் பாதுகாப்பு என்பது நம் அனைவரின் பொறுப்பு என்றும் பிரதமர் கூறினார்.
ALSO READ:தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது
370 சட்டப்பிரிவில் எந்த சமரசமும் இல்லை: மெஹபூபா முஃப்தி
கூட்டத்திற்குப் பிறகு, பிடிபி தலைவர் மெஹபூபா முஃப்தி (Mehbooba Mufti) கூறுகையில், "370 வது சட்டப்பிரிவை நீக்கும் எண்ணம் உங்களுக்கு இருந்திருந்தால், நீங்கள் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தை கூட்டி அதை செய்திருக்க வேண்டும் என்று நான் கூட்டத்தில் பிரதமரிடம் கூறினேன். அதை சட்டவிரோதமாக அகற்ற யாருக்கும் உரிமை இல்லை. நாங்கள் 370 வது பிரிவை அரசியலமைப்பு மற்றும் சட்ட வழியில் மீட்டெடுக்க விரும்புகிறோம்." என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், "ஜம்மு-காஷ்மீர் மக்கள் 370 வது பிரிவை ரத்து செய்ததால் கோபமாக இருப்பதாக நான் கூட்டத்தில் தெரிவித்தேன். ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை மீண்டும் கொண்டு வருவோம். இதற்காக நாங்கள் சமாதான பாதையை பின்பற்றுவோம். இதில் எந்த சமரசமும் இருக்காது." என்றார்.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஜம்மு-காஷ்மீரில் அனைத்து இடங்களிலும் வளர்ச்சி சென்றடைய கூட்டு முயற்சி வேண்டும் என்று பிரதமர் கூறியதாக தெரிவித்தார். விதான் சபா தேர்தலுக்கான டிலிமிடேஷன் செயல்முறை விரைவாக முடிக்கப்பட வேண்டும். அப்படி செய்தால்தான், ஒவ்வொரு பிராந்தியத்திலிருந்தும் சட்டமன்றத்தில் பிரதிநிதித்தும் இருக்கும் என அவர் மேலும் கூறினார்.
இந்த சந்திப்பை பற்றி பேசிய உமர் அப்துல்லா, "ஆகஸ்ட் 5, 2019 அன்று, 370 ஐ ரத்து செய்வதற்கான மத்திய அரசின் முடிவை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று கூட்டத்தில் கூறினோம். 370 பிரிவு நீக்கப்பட்ட பிரச்சினையை நீதிமன்றம் மூலம் நாங்கள் எதிர்கொள்வோம். ஜம்மு-காஷ்மீருக்கு (Jammu Kashmir) முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்." என்று தெரிவித்தார்.
குறிப்பிடத்தக்க வகையில், ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 வது சட்டப்பிரிவின் பிரிவின் பெரும்பாலான விதிகள் நீக்கப்பட்டு, அந்த மாநிலம் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, பிரதமர் மோடியே தலைமை தாங்கிய முதல் கூட்டம் இதுவாகும்.
ALSO READ: நிழலுக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரர் போதைப்பொருள் வழக்கில் கைது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR