ஃபிட் இந்தியா இயக்கத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..
#WATCH Prime Minister Narendra Modi launches #FitIndiaMovement from the Indira Gandhi Stadium on #NationalSportsDay.#Delhi https://t.co/uDGBCXJCHq
— ANI (@ANI) August 29, 2019
ஃபிட் இந்தியா இயக்கத்தை இன்று தொடக்கி வைக்கிறார் மோடி; பள்ளிகள், கல்லூரிகளில் நேரடி ஒலிபரப்பு!
பிரதமர் நரேந்திர மோடி இன்று 'ஃபிட் இந்தியா இயக்கத்தை துவக்கி வைக்கிறார். இதில் கல்லுாரி மாணவர்கள் உறுதிமொழி எடுக்க, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு மத்திய அரசின் சார்பில், துாய்மை இந்தியா, யோகா தினம், டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா என, பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வரிசையில், ''ஃபிட் இந்தியா'' என்ற திட்டத்தை, பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார்.
ஒவ்வொருவரும் உடல் திறனை வளர்த்து கொள்ளவும், உடல் உறுதியை பேணும் வகையிலும், உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு போன்றவற்றை பின்பற்ற வேண்டி , இந்த திட்டம் துவங்கப்படுகிறது. டில்லியில், இன்று நடக்கும் விழாவில், பிரதமர் மோடி, திட்டத்தை தொடக்கி வைக்கிறார்.
இந்த துக்கவிழா துார்தர்ஷன் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. இதை, மத்திய அரசு அலுவலகங்கள், கல்லுாரிகளில் பார்க்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. விழாவில், கல்லூரி மாணவ - மாணவிகள் கலந்து கொண்டு ‘உடல் உறுதியை பேணுவோம்’ என உறுதிமொழி ஏற்க இருக்கின்றனர். மேலும் இந்த உறுதிமொழியை அனைத்து கல்லூரி மாணவ-மாணவியர்களும் எடுக்க வேண்டும் என்று கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.