9_வது பிரிக்ஸ் உச்சி மாநாடு சீனாவின் புஜியான் மாகாணத்தில் அமைத்துள்ள ஜியாமென் நகரில் நடைபெறும்.
டோக்லாம் பிரச்சனை முடிவடைந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திரா மோடி, சீனாவில் செப்டம்பர் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெறும் 9_வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார் என வெளிவிவகார அமைச்சுகம் தெரிவித்துள்ளது.
இந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய உறுப்பு நாடுகள் கலந்து கொள்கின்றன.
மியான்மர் அதிபர் யூ ஹ்தின் கியாவின் அழைப்பின் பேரில் பிரிக்ஸ் உச்சி மாநாடு முடித்துக்கொண்டு பிரதமர் மோடி செப்டம்பர் 5 மற்றும் 7-ம் தேதி மியான்மார் செல்லுகிறார்.