உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் ரூ.60000 கோடி மதிப்பில் 81 முதலீட்டு திட்டங்களை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று லக்னோவில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரூ. 60,000 கோடி மதிப்புள்ள 81 முதலீட்டு திட்டங்களைத் தொடங்கிவைத்துள்ளார். இந்த முயற்சியை குறித்து ‘கற்பனைக்கெட்டாத சாதனை’ என உத்தரபிரதேச முதலவர் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார்.
प्रधानमंत्री श्री @narendramodi लखनऊ में 60 हजार करोड़ से अधिक की 81 परियोजनाओं का शिलान्यास कर रहे हैं...लाइव देखें #UPToNewIndia https://t.co/yRnxENTclI pic.twitter.com/sLKtN2BO0p
— BJP Uttar Pradesh (@BJP4UP) July 29, 2018
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி அவர்கள் தெரிவிக்கையில்... டிஜிட்டல் இந்தியாவிற்கும் - இந்தியாவிற்கும் ஒரு புதிய திசையை வழங்குவதில் இந்த திட்டங்கள் ஒரு பெரிய படியாக அமையும் எனவும், இன்பர்மேஷன் டெக்னாலஜி எனப்படும் ஐடி துறையின் உதவியில் உத்தரபிரதேசத்தில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு சேவை ஒரு புதிய வழியினையும், இளைஞருகளுக்கான புதிய உத்வேகத்தினையும் தரும் என குறிப்பிட்டுள்ளார்.
மொபைல் உற்பத்தியாளர்களின் கையில் இந்த உலகம் அடங்கி வருகிறது. உத்திர பிரதேசத்தை பொருத்தவரையில் 50-க்கும் மேற்பட்ட மொபைல் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் உலகில் மிகப்பெறிய மொபைல் உற்பத்தி நிறுவனத்தை உத்திர பிரதேசத்தில் நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆளும் பாஜக ஆட்சியிக்கு முந்தைய ஆட்சியில் காங்கிரஸ், இதற கட்சிகள் நாட்டிற்கு தேவையான திட்டங்களை சரியாக செயல்படுத்தமல் இருந்ததால் தான். தற்போது நம் நாடு கண்டு வரும் இன்னல்கள் எல்லாம் நம்மை 70 ஆண்கள் பின்நோக்கி கொண்டு சென்றுள்ளது என தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதியநாத் அவர்கள் தெரிவிக்கையில்.. உத்திரபிரதேச மாநிலத்தில் தொழில் முனைவொருக்கு ஏற்ற வகையில் புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற கால நிலைகள் நிலவி வருகின்றது. இதன் காரணமாக தொழில் வளர்ச்சியில் நாட்டில் 5 வது இடத்தினை பெற்றுள்ளது. எனவே ஆளும் பாஜக அரசு உத்திரபிரதேசத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.60000 கோடி திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மேலம் ரூ,50000 கோடி மதிப்பிளான திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளளார்!