ஹரியானாவில் ''பத்மாவத்'' திரைப்படத்தை திரையிட மறுத்து குருகிராம் பி.வி.ஆர் சினிமாவிற்கு வெளியில் நோட்டிஸ் ஓட்டப்பட்டுள்ளது.
Notice put up outside PVR Cinemas in Gurugram's Ambience Mall. #Padmaavat #Haryana pic.twitter.com/3F5nWNB6D2
— ANI (@ANI) January 25, 2018
இன்று வெளியாக உள்ள பத்மாவத் திரைப்படத்துக்காக குஜராத்,ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகள் கலவர பூமியாக மாறியுள்ளது. பல இடங்களில் தொடர் போராட்டம் மற்றும் தீ வைப்பு சம்பவங்களும் நடத்தி வருகின்றனர்..இதையடுத்து, அனைத்து பகுதிகளும் தீயினால் சூழ்ந்து காணப்படுகிறது
எனவே, ராஜஸ்தான், குஜராத், ''திரையரங்குகளில் பகுதி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவான `பத்மாவத்' படம் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இந்தப் படம் இன்று (ஜனவரி 25–ம் தேதி) வெளியாகிறது. ஆனால் ‘பத்மாவத்’ படத்துக்கு குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது. அதை சுப்ரீம் கோர்ட்டு அகற்றி கடந்த 18–ந் தேதி உத்தரவிட்டது.
இதையடுத்து, இத்திரை படம் வெளியாவதை தொடர்ந்து கர்னி சேனா அமைப்பினர் பல இடங்களில் தொடர் போராட்டம் மற்றும் தீ வைப்பு சம்பவங்களும் நடத்தி வருகின்றனர்.இந்த கடும் எதிர்ப்பை தொடர்ந்து எராளமா தியேட்டர் சூறையாடப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, அப்பகுதில் உள்ள எராளமான வாகனங்களை போராட்டகார்கள் தீ வைத்து எரித்துள்ளனர். மேலும்,அகமதாபாத்தில் சாலையோரம் இருந்த பெட்டிக்கடைகள் அங்கு இருந்த இரு சக்கர வாகனங்களையும் போராட்டகாரர்கள் அடித்து நொறுக்கினர்
இதை தொடர்ந்து, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது மும்பை பி.வி.ஆர் சினிமாவுக்கு வெளியில் பாதுகாப்பு படைகள், தீவிரமாக கண்காணித்து வரும் காட்சி. இதே போன்று ஆக்ராவிலும் பாதுகாப்புகள் பலப்படுத்தபட்டுள்ளனர்.
இந்நிலையில், திரையரங்குககள் மூடப்பட்டு வருகின்றனர்.தற்போது ஹரியானாவில் பத்மாவத் திரைப்படத்தை வெளியிட மறுத்து குருகிராம் அம்பிகா மகாலில் உள்ள பி.வி.ஆர் திரையரங்கிற்கு வெளியில் நோட்டிஸ் ஓட்டப்பட்டுள்ளது.