ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்!
ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்து உர்ஜித் படேல், நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனிடையே, கவர்னர் பதவிக்கு பல்வேறு அதிகாரிகளின் பெயர்கள் அடிபட்ட நிலையில் தற்போது சக்திகாந்த தாஸ், புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Reuters: Former finance secretary and current member of the finance commission Shaktikanta Das has been appointed as the Governor of the Reserve Bank of India (RBI). pic.twitter.com/EGgTsXvjd6
— ANI (@ANI) December 11, 2018
மத்திய நிதித்துறை செயலாளராக பணியாற்றிய சக்திகாந்த தாஸ், பொருளாதார விவகாரத்துறை, நிதித்துறை, வேதிப்பொருட்கள் துறை உள்ளிட்டவைகளின் செயலாளாரகவும் பணியாற்றியுள்ளார்.
சமீபகாலமாக மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவி வகித்த உர்ஜித் படேல் இடையே நிதி விவகாரத்தில் மோதல் வலுத்து வந்தது. வராகடன் பிரச்னையில் சிக்கி தவித்து வரும் வங்கிகளிடம் காட்டப்பட்டு வரும் கெடுபிடியை ரிசர்வ் வங்கி தளர்த்த வேண்டும். ரிசர்வ் வங்கியிடம் உள்ள பல லட்சம் கோடி ரூபாயை நாட்டின் வளர்ச்சி பணிகளுக்காக விடுவிக்க வேண்டும் என மத்திய அரசு கூறி வருவதாகவும், இதற்கு உர்ஜித் அடிபணியவில்லை எனவும் தகவல்கள் வெளயானது.
இதற்கிடையில் உர்ஜித் பட்டேல் தனது பதவியினை ராஜினாமா செய்யவுள்ளதாவகவும் நகவல்கள் வெளியானது. ஆனால் உர்ஜித் சார்பு வட்டாரங்கள் அவர் பதவியில் தொடருவார் என தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று மாலை திடீரென உர்ஜித் பட்டேல் தனது கவர்னர் பதவியினை ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்தார்.
இந்நிலையில் காலியாகியுள்ள ரிசர்வ் வங்கி கவர்னர் பதவிக்கு சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!