முக்கிய தகவல்களை பணத்துக்காக பகிர்ந்த EPFO அதிகாரிகள் மீது CBI வழக்குப்பதிவு

சில இபிஎஃப்ஓ அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததை அடுத்து,  மத்திய புலனாய்வு அமைப்பு, குண்டூரில் உள்ள பிராந்திய அலுவலகத்தில் இபிஎஃப்ஓ விஜிலென்ஸ் துறையுடன் இணைந்து திடீர் சோதனை நடத்தியது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 3, 2022, 10:10 AM IST
  • மோசடி பணிகளில் ஈடுபட்ட இபிஎஃப்ஓ அதிகாரிகள்.
  • குண்டூர் மண்டல அலுவலகத்தில் முறைகேடு.
  • அதிகாரிகளின் இல்லங்கள் மற்றும் அலுவலங்களில் சோதனை.
முக்கிய தகவல்களை பணத்துக்காக பகிர்ந்த EPFO அதிகாரிகள் மீது  CBI வழக்குப்பதிவு title=

தனியார் வருங்கால வைப்பு நிதி ஆலோசகர்களிடமிருந்து பேடிஎம், போன்பே மற்றும் கூகிள் பே போன்ற கட்டண தளங்கள் மூலம் மூலம் பணம் பெற்றதாக ஆந்திர பிரதேசத்தின் குண்டூரில் உள்ள EPFO ​​இன் 20 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. பி.எஃப் கிளெயிம்களை செட்டில் செய்வது போன்ற தங்களது அன்றாட பணிகளை செய்வதற்கே இவர்கள் பணம் பெற்றதாக கூறப்படுகின்றது. 

சில இபிஎஃப்ஓ (EPFO) அதிகாரிகள் கடுமையான முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததை அடுத்து,  மத்திய புலனாய்வு அமைப்பு, குண்டூரில் உள்ள பிராந்திய அலுவலகத்தில் இபிஎஃப்ஓ விஜிலென்ஸ் துறையுடன் இணைந்து திடீர் சோதனை நடத்தியது. இதில் அவர்களது மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

குற்றம் சாட்டப்பட்டவர்களின் தொலைபேசிகளை ஆய்வு செய்ததில், EPFO ​​பயனாளிகளின் UAN, கடவுச்சொற்கள், OTPகள் போன்ற பல தகவல்கள் தனியார் PF ஆலோசகர்களின் சில தொலைபேசி எண்களுடன் பகிரப்பட்டது தெரிய வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில், சிபிஐயின் விசாகப்பட்டினம் பிரிவு குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் மீது நான்கு எஃப்ஐஆர்களை பதிவு செய்தது.

"மேலும், அதிகாரிகள் மற்றும் அத்தகைய தனியார் ஆலோசகர்களுக்கு இடையே பரிமாற்றம் செய்யப்பட்ட தரவு, EPFO-வின் ​​அதிகாரப்பூர்வ பணியைச் செய்வதற்குப் பதிலாக அவர்கள் சட்டவிரோதமான பலன்களைப் பெறுகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. PayTM, PhonePe மற்றும் Google Pay போன்ற பல்வேறு மொபைல் கட்டண செயலிகள் மூலம் பணம் பெறப்பட்டுள்ளது." என்று எஃப்.ஐ.ஆர்-ல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

ALSO READ | தங்கம் மீதான முதலீடு பளபளப்பை இழந்ததா; ஆய்வு கூறுவது என்ன!

ஆலோசகர்களுடன் UAN மற்றும் அந்தந்த கடவுச்சொற்களைப் பகிர்ந்த பிறகு, மொபைல் செயலிகள் மூலம் செலுத்தப்பட்ட கட்டணங்களின் ஸ்கிரீன்ஷாட்களை ஊழியர்கள் பெற்றதாக தொலைபேசிகளின் பகுப்பாய்வு காட்டுகிறது.

"ஆந்திராவின் குண்டூர், ஓங்கோல், சிராலா, விஜயவாடா மற்றும் குண்டுபள்ளி ஆகிய இடங்களில் சுமார் 40 இடங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடியிருப்பு மற்றும் அலுவலக வளாகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சில குற்றவியல் ஆவணங்கள் மீட்டெடுக்கப்பட்டன" என்று சிபிஐ (CBI) செய்தித் தொடர்பாளர் ஆர்சி ஜோஷி கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி, 712 போலி பிஎஃப் கணக்குகளில் (PF Accounts) போலி கிளெயிம்களை செட்டில் செய்ததாக மும்பையில் பல இபிஎஃப்ஓ அதிகாரிகள் மீது சிபிஐ பதிவு செய்தது. இந்த மோசடியில் இபிஎஃப் கார்ப்பஸுக்கு ரூ.18.97 கோடி (தோராயமாக) இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தகது. 

"குற்றம் சாட்டப்பட்டவர்கள் தனித்துவமான நடைமுறையை பின்பற்றி, மூடிய நிறுவனங்களின் சில நபர்களின் பெயரில் போலி பிஎஃப் கணக்குகளை உருவாக்கி, ஒவ்வொரு கணக்கிலும் சுமார் ரூ. 2 லட்சம் முதல் 4 லட்சம் வரை வரவுகளை காட்டி, பின்னர் இந்தக் கணக்குகளில் இருந்து தொகையை எடுத்ததாக மேலும் குற்றம் சாட்டப்பட்டது. போலி கிளெயிம்களை தாக்கல் செய்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வங்கிக் கணக்குகள் உள்ள உறுப்பினர்களுக்கு இவை செட்டில் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது," என்று ஜோஷி கூறினார்.

ALSO READ | PF கணக்கிலிருந்து இரண்டாவது முறையும் கோவிட் அட்வான்ஸ் எடுக்கலாம்: செயல்முறை இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News