புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டு வந்த உட்கட்சிப் பூசல்களில் ஒன்றில் சற்று ஆறுதலைப் பெற்றுள்ளது. பன்ஞாப் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவர் சித்து ராஜினாமா கொடுத்திருந்தார். ஏற்கனவே பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த அம்ரிந்தர் சிங் பதவி விலகிய நிலையில் அங்கு பல குழப்பங்கள் நிலவி வந்தன.
எனவே பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டியின் தலைமையை மாற்றுவதற்கான சூழ்நிலையும் ஏற்பட்டு காங்கிரஸ் இக்கட்டில் சிக்கி இருந்தது. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் கட்சியின் முக்கிய முகமான சித்துவை சமாதானப்படுத்துவதில் காங்கிரஸ் கட்சி மேலிடம் வெற்றி பெற்றுள்ளது. எனவே, பஞ்சாப் காங்கிரசின் அரசியல் குழப்பம் இப்போது முடிவுக்கு வருவதாகத் தெரிகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நீடிக்கும் தொடர் சிக்கல்கள் தொடர்பாக பல்வேறு ஊகங்களும் இருந்த நிலையில், நேற்று டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்த பிறகு நவ்ஜோத் சிங் சித்து தனது ராஜினாமாவை திரும்பப் பெற்றார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சித்து, ராகுல் காந்தியிடம் தனது கவலைகளைச் சொன்னதாகவும், தனது வருத்தங்கள் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் தெரிவிட்தார். எனவே, இனி நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக இருப்பார்.
ராகுல் காந்தி மற்றும் சித்து சந்திப்புக்குப் பிறகு ஹரிஷ் ராவத்துக்கும் நிம்மதி ஏற்பட்டுள்ளது. கட்சியின் மேலிடப் பொறுப்பாளரான ஹரிஷ் ராவத், நிலைமை இயல்பாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
Read Also | பயங்கரவாத தாக்குதல் குறித்த எச்சரிக்கையால் High Alert!!
ராகுல் காந்தியை சந்திப்பதற்கு முன்னதாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் பஞ்சாப் மாநிலப் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத்தை சித்து சந்தித்துக் கலந்தாலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைமையகத்தில் வியாழக்கிழமையன்று நடைபெற்ற சுமார் ஒன்றரை மணி நேரம் கூட்டத்தில் பஞ்சாப் அரசு மற்றும் அமைப்பு தொடர்பான பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. இதில் ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சி செய்யப்பட்டது.
ஏனெனில் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற சில மாதங்களே இருக்கும் நிலையில் சிக்கல் நீடிப்பது கட்சிக்கு நல்லதில்லை. எனவே, தேர்தலுக்கு முன், கட்சியில் இருந்த கருத்து வேறுபாடுகள் களையப்படவேண்டும் என்று எடுக்கப்பட்ட முயற்சி தற்போது வெற்றி பெற்றிருக்கிறது.
ராகுல் காந்தியுடனான சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய சித்து, "காங்கிரஸ் தலைவர், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, அவர்கள் எந்த முடிவை எடுத்தாலும் அது காங்கிரஸ் மற்றும் பஞ்சாபின் நலனுக்காக இருக்கும் என்றும், அவர்களுடைய அறிவுரைகளை பின்பற்றுவேன்" என்று கூறினார்.
சித்து செப்டம்பர் 28 அன்று பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில், சித்து கட்சிக்கு தொடர்ந்து சேவை செய்வதாக கூறியிருந்தார். அவர் இந்த கடிதத்தில், 'எந்தவொரு நபரின் ஆளுமைச் சரிவும் சமரசத்துடன் தொடங்குகிறது, பஞ்சாபின் எதிர்காலம் மற்றும் பஞ்சாபின் நலன் குறித்து நான் சமரசம் செய்ய முடியாது' என்று தெரிவித்திருந்தார்.
Also Read | இந்தியா 6வது முறையாக UNHRC உறுப்பினராக தேர்வு.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR