மத்திய அரசு அலுவலகங்களில் கடைநிலை ஊழியர்களை நியமிப்பதற்கான மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் தேர்வு (எஸ்.எஸ்.சி.) கடந்த மாதம் 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடந்தது.
தேர்வுகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்த ஒரு தனியார் நிறுவனம் தேர்வின் வினாத்தாள் வெளியானதாகக் கூறப்படும் நிலையில், அது குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தேர்வு எழுதியவர்களில் சிலர், பணியாளர் தேர்வுக்குழு ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர். மேலும், சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வட மாநிலங்களில் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் தலைவர் அஷிம் குரானா ஆகியோரை நேற்று முன்தினம் நேரில் சந்தித்து முறையிட்டனர். இந்த நிலையில், மத்திய பணியாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும்படி சி.பி.ஐ-க்கு மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. இந்த தகவலை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
இந்நிலையில், இரண்டு நாட்கள் கழித்து டெல்லி JLN ஸ்டேடியம் மெட்ரோ நிலையம் இன்று திறக்கப்பட்டது. மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.