பள்ளித்தலைவர் தேர்தலில் தோல்வியடைந்த 8 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை..!
தெலுங்கானாவின் யாதத்ரி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் சமீபத்தில் நடைபெற்ற வகுப்புத் தலைவர் தேர்தலில் தோல்வியடைந்த 8 ஆம் வகுப்பில் படிக்கும் 13 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
உயிரிழந்த மாணவர் சரண் என அடையாளம் காணப்பட்துள்ளார். கடந்த வியாழக்கிழமை மாலை முதல் காணாமல் போன அவர், ராமன்னாபேட்டை பகுதியில் உள்ள ரயில் பாதையில் கடந்த வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தார்.
போங்கிர் TCP, நாராயண ரெட்டி, ANI-இடம் கூறுகையில்; "அதிகாலை நேரத்தில், 13 வயது சிறுவனின் பெற்றோரிடமிருந்து வியாழக்கிழமை மாலை முதல் அவர் காணவில்லை என்று புகார் வந்தது. உடனடியாக, இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை துவங்கியது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை பிற்பகல் அவர் ராமன்னாபேட்டை பகுதியில் ரயில் பாதையில் இறந்து சடலமாக கிடந்துள்ளார்.
"அவர் தனது பள்ளியில் வகுப்பு தலைமைத் தேர்தலில் தோல்வியடைந்ததால் கடந்த மூன்று நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. அவர் 8 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார், மூன்று நாட்களுக்கு முன்பு பள்ளி நிர்வாகம் தனது வகுப்பில் வகுப்புத் தலைவருக்கான தேர்தல்களை நடத்தியது, அவர் தோல்வியடைந்தார். இவருக்கு எதிராக தேர்தலில் நின்றவர் ஒரு பெண் மாணவி. இதையடுத்து, மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார் "என்று ரெட்டி கூறினார்.
இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக உள்ளூராட்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக பெற்றோர்கள் புகார் அளித்தால் நாங்கள் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொள்வோம். எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.