கங்கையை ஆக்கிரமித்தால் 7 ஆண்டு சிறை அல்லது 100 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் அளவுக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழுவால், தேசிய கங்கை நதி மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் பரிந்துரையின் படி கங்கை நதியின் பயண பாதையை தடுத்தல், மணல் அள்ளுதல், கங்கை கரையில் அனுமதியின்றி கட்டடம் கட்டுதல் உள்ளிட்ட கங்கையை பாதிக்கும் செயல்களில் ஈடுபட்டால் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவின்படி:-
> கங்கை நதிநீர் பாய்வதை தடுத்தால் ரூ.100 கோடி அபராதம், 2 ஆண்டு வரை சிறை தண்டனையும் விதிக்கப்படலாம்.
> கங்கை நதி நீர் ஓடும் பாதையில் கட்டடம் கட்டினால் ரூ.50 கோடி அபராதம், ஓராண்டு சிறை தண்டனை.
> கழிவுகளை கொட்டுவதுடன், கழிவு நீரை கலக்கச் செய்தால் ரூ.50,000 வரை அபராதமோ அல்லது ஓராண்டு சிறையோ அல்லது இரண்டுமோ வழங்கப்படும்.