உத்தரப்பிரதேச மாநிலம் உன்னோவில் நடைபெற்ற பரிசோதனையில் 40 பேர் எச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிப்பு.
கடந்த மாதம் மட்டும் உத்தரப்பிரதேச மாநிலம் உன்னோவில் எச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை திடீரென அதிகரித்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
Bangarmau என்ற பகுதியில் உள்ள மருத்துவர் குறைந்த செலவில் சிகிச்சை என்ற பெயரில் ஒரே ஊசியை நோயாளிகள் பயன்படுத்தி எச்ஐவி கிருமியை பரவச் செய்துள்ளார். இதனால் கடந்த மாதம் மட்டும் சுமார் 40 பேர் எச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ராஜேந்திர யாதவ் என்ற மருத்துவரை அதிகாரிகள் கண்டுபிடித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.