சமாஜ்வாதி கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு கொடூரமான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஏறத்தாழ 2 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவில், போலீஸ்காரர் ஒரு பெண்ணை பலமாக தாக்குவது தெரிகிறது. வலியால் துடித்து, உதவி கேட்கும் பெண்ணை உத்தர பிரதேசத்தின் கான்பூரின் கக்வான் பகுதியின் சப்-இன்ஸ்பெக்டர் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.
தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்துள்ளதாக தெரிகறது. அவர்கள் போலீஸ்காரரை நோக்கி, "ஏன் கதவை பூட்டினாய், அவளை என்ன செய்கிறாய்" என்று கூறுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. அவர்களின் அந்த கேள்விகளுக்கு, தாக்குதலுக்கு உள்ளாகும் பெண், "அவர் என்னை அடிக்கிறார், சித்திரவதை செய்கிறார்" என்று அறைக்குள் இருந்து பதிலளித்தார்.
இதற்கிடையில், போலீஸ்காரர் தன்னை வீடியோ எடுப்பதை உணர்ந்தவுடன், கேமராக்களை நோக்கி பின்வருமாறு கூறினார். "நீங்கள் காவல்துறை எதிர்த்து செயல்படுகிறீர்கள். நீங்கள் செய்வது தவறு" என அந்த காவலர் சமாளிக்க முயன்றார்.
இதனை தொடர்ந்து, மாநிலத்தை ஆளும் முதலமைச்சர் யோகியையும், பாஜக அரசையும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி கடுமையாக சாடியுள்ளது. இதுகுறித்து, அக்கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், “கான்பூர் காவல்துறையின் வெட்கக்கேடான செயல். ஒவ்வொரு நாளும், யோகி அரசாங்கத்தின் காவல்துறை குடிமக்கள் மீது அட்டூழியங்களைச் செய்யும் வீடியோக்கள் வெளிவருகின்றன, ஆனால் முதல்வர் அமைதியாக இருக்கிறார். இது குறித்து விசாரணை நடத்தி, போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என குறிப்பிடப்படுள்ளது.
மேலும் படிக்க | இஸ்லாமியரை குத்தி கொன்ற கும்பல்... மது விற்பனைக்கு தடை - 144 உத்தரவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ