மும்மை: மும்பையில் இனி மொபைலில் பேசிக்கொண்டு வாகம் ஓட்டுபவர்கள் பிடிபட்டால், அவர்களது ஓட்டுநர் உரிமம் 3 மாதகங்கள் தற்காலிக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தடுக்கம் விதமாக மாநிலக போக்குவரத்து துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மொபைலில் பேசிக்கொண்டு வாகம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையினை அனைத்து போக்குவரத்து காவல்துறைக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி சட்டமானது தற்போது புனே-மும்பை நகரங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நகரங்களிலும் அமல்படுத்தப்படும் என மும்பை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்த திருத்தத்தின் கீழ் பிடிப்படும் நபர்களது ஓட்டுநர் உரிமம் 3 மாதத்திற்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படும் எனவும், வாகன் ஓட்டும்போது மொபைலில் பேசுதல் உள்பட GR-ல் பட்டியலிடப்பட்டுள்ள 6 குற்றங்கள் செய்பவர்களுக்கும் இந்த தண்டனை பொருந்தும் என இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி அதிக வேகம், குடித்துவிட்டு வாகனம் இயக்குதல், சிக்னல்களை விதிகளை மீறி செல்லுதல், வாகன் ஓட்டும்போது மொபைலில் பேசுதல், கமர்சியல் வாகனங்களில் அளவுக்கு அதிகமான எடைகளை ஏற்றி செல்லுதல், கமர்சியல் வாகனங்களில் பயணிக்கும் வாடிக்கையாளர்களிடன் கடுமையாக நடந்துக்கொள்ளுதல் என 6 குற்ற செயல்களுக்கு எந்த சட்டம் அமல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த செயல்களில் ஈடுப்படும் நபர்களிடம் இருந்து அபராதம் ஏதும் வசூளிக்கப்படாது., அவர்கள் ஓட்டுநர் உரிமம் மட்டுமே ரத்து செய்யப்படும். இதன் காரணமாக அவர்கள் 3 மாதத்திற்கு வாகனம் இயக்காமல் இருப்பர், இதனால் தக்க பாடம் கற்பர் என மும்பை போக்குவரத்து துறை தெரிவிக்கின்றது.