புது டெல்லி: அமைச்சரவை செயலாளர் தலைமையிலான குழு ஆகஸ்ட் 7 ம் தேதி ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பதவிக்கு பட்டியலிடப்பட்டவர்களிடம் நேர்காணல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முந்தைய அட்டவணையின்படி, நேர்காணல் (Interview) ஜூலை 23 அன்று நடைபெறவிருந்தது. ஆனால் சில காரணங்களால் அது ஒத்திவைக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கியின் (RBI Act) சட்டத்தின்படி, ரிசர்வ் வங்கியில் /-நான்கு துணை ஆளுநர்கள் இருக்க வேண்டும். தற்போது, ரிசர்வ் வங்கியில் மூன்று துணை ஆளுநர்கள் உள்ளனர். அவர்கள், பி பி கனுங்கோ, எம் கே ஜெயின் மற்றும் மைக்கேல் டெபப்ரதா பத்ரா ஆவார்கள்.
துணை ஆளுநர் (Deputy Governor Appointments) நியமனங்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படுகிறது. ஒருவருக்கு மூன்று ஆண்டுகளுக்கும் பதவி நிறைவடைந்தாலும், மீண்டும், அவர்களை மீண்டும் நியமனம் செய்ய முடியும். துணை ஆளுநருக்கு ஒரு மாதத்திற்கு ரூ 2.25 லட்சம் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் (Allowances) கிடைக்கும்.
மத்திய ரிசர்வ் வங்கியின் மூத்த துணை துணை ஆளுநர் என்.எஸ். விஸ்வநாதன் (N S Vishwanathan) 3 மாத காலத்தில் முன்னதாக பதவியில் இருந்து விலகியதால், பெரும் சர்ச்சை ஏற்பட்டது. ஏனென்றால், கடந்த ஆண்டு RBI வங்கியின் முக்கிய அதிகாரிக்கள் ராஜினாமா செய்தனர்.
2018 ஆம் ஆண்டு கடந்த டிசம்பரில் ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் படேல், 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் துணை ஆளுநராக இருந்த ஒருவரான விரல் ஆச்சார்யா பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு அடுத்து மூத்த துணை துணை ஆளுநராக இருந்த என்.எஸ். விஸ்வநாதனும் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதித்துறை ஒழுங்குமுறை நியமனம் குழு (FSRASC) எட்டு பெயர்களை அடங்கிய இறுதிபட்டியலை தயார் செய்துள்ளது. அவர்களிடம் வீடியோ மூலம் நேர்காணல் நடத்தப்படும். அந்த நேர்காணலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்களை பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் நியமனங்கள் குழுவுக்கு இறுதி ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.
ALSO READ | இயல்பு நிலைக்கு திரும்பும் இந்திய பொருளாதாரம்: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்
எஃப்.எஸ்.ஆர்.எஸ்.சி.யின் குழுவில், அந்த அமைப்பின் உறுப்பினர்களை தவிர ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர், நிதிச் சேவை செயலாளர் மற்றும் இரண்டு இன்டெபேன்டென்ட் உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் அமைச்சரவை செயலாளரும் இடம் பெற்றுள்ளார். ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பதவி என்பது, மத்திய ரிசர்வ் வங்கியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.