ZEE NEWS தொகுப்பாளர் ரோஹித் ரஞ்சனுக்கு உச்சநீதிமன்றத்தில் பெரும் நிவாரணம் கிடைத்துள்ளது. ரோஹித் ரஞ்சனை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ரோஹித் ரஞ்சன் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டாலும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சத்தீஸ்கர் காவல்துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் காவல்துறை விதிகளை புறக்கணித்து ரோஹித் ரஞ்சனை கைது செய்ய அவரது வீட்டிற்கு வந்துள்ளது. ரோஹித் ரஞ்சன் காசியாபாத் இந்திரபுரத்தில் வசித்து வரும் நிலையில், உத்தரபிரதேச காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் ரோஹித் ரஞ்சனை கைது செய்ய சத்தீஸ்கர் போலீசார் வந்தனர்.
சத்தீஸ்கர் காவல்துறையைச் சேர்ந்த 10-15 பேர் ரோஹித்தின் வீட்டில் அடையாள அட்டை இல்லாமலும், சீருடை இல்லாமலும் அதிகாலை 5 மணிக்கு ரோஹித்தின் வீட்டிற்கு வந்தனர். ரோஹித் ரஞ்சனின் வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடினர். ரோஹித் ரஞ்சன் வசிக்கும் குடியிறுப்பு பகுதியின் பாதுகாவலர்களிடமும் சத்தீஸ்கர் காவல்துறை தவறாக நடந்து கொண்டது.
அவர் செவ்வாய்க்கிழமை நொய்டா காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பின்னர் தன்னை காவல் துறை மீண்டு கைது செய்ய முயற்சிக்கிறது என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில், ரோஹித் ரஞ்சன் தன் மீது பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரை ரத்து செய்யக் கோரியிருந்தார்.
மேலும் படிக்க | அடுத்த கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் மற்றும் இங்கிலாந்து பிரதமராக இவர் பதவி ஏற்கலாம்
இந்நிலையில், ரோஹித் ரஞ்சன் தாக்கல் செய்த மனு தொடர்பாக, நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு, அட்டர்னி ஜெனரல் அலுவலகம் மூலம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ரோஹித் ரஞ்சன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, ஒரே குற்றச்சாட்டிற்காக அவருக்கு எதிராக பல எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ரோஹித் ரஞ்சனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பல எப்ஐஆர்கள் காரணமாக அவர் மீண்டும் மீண்டும் காவலில் வைக்கப்படுவதால், இந்த விவகாரம் அவசர விசாரணை தேவை என்று லுத்ரா கூறியுள்ளார். ரோஹித் ரஞ்சன், ஒரு நிகழ்ச்சியை நடத்தும் போது கூறிய தவறான தகவலுக்காக மன்னிப்புக் கேட்டதாகவும், ஆனால் அவருக்கு எதிராக பல எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டன எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR