மத்திய பட்ஜெட் 2023-24: 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இன்னும் 15 நாட்களுக்கும் குறைவாகவே உள்ளது. இன்னும் சில நாட்களில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வார் என்பதால், பட்ஜெட் மீதான மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. தொழில் வல்லுநர்கள் முதல் விவசாயிகள் வரை, சாமானியர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை, இந்த முறை அரசாங்கம் நிச்சயமாக ஏதாவது பெரிய அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மக்களவை தேர்தலுக்கு முன், மோடி அரசாங்கத்தின் கடைசி பட்ஜெட் இது என்பதால், இது குறித்த எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. பட்ஜெட்டில் மத்திய ஊழியர்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பற்றிய அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது
இந்த பட்ஜெட்டில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் குறித்து நிதி அமைச்சரிடம் இருந்து பெரிய அறிவிப்பு வெளியாகலாம் என பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. வரவிருக்கும் பட்ஜெட்டுக்குப் பிறகு, அரசாங்கம் அதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த மாற்றம் ஏற்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் பம்பரமாக உயரும். தற்போது மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது. ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் மாற்றம் ஏற்பட்டால் அது ரூ.26,000 ஆக உயரும்.
2.57ல் இருந்து 3.68 ஆக உயர்த்த கோரிக்கை
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, ஃபிட்மெண்ட் ஃபாக்டர் தொடர்பான வரைவைத் தயாரிக்க அரசு தயாராகி வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் திருத்தம் செய்யப்படுவது தொடர்பாக வரைவில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபிட்மென்ட் பேக்டரை 2.57ல் இருந்து 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
தற்போது மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணி 2.57 ஆக உள்ளது. அதன்படி, அடிப்படை ஊதியமான 18000-ல் (18,000 X 2.57 = 46260) ஊழியர்களுக்கு ரூ.46260 கிடைக்கும். ஊழியர்களின் கோரிக்கைக்கு ஏற்ப இது 3.68 மடங்கு உயர்த்தப்பட்டால், மற்ற அலவன்ஸ்கள் தவிர்த்து, ஊதியம், 26000 X 3.68 = ரூ 95680 ஆகும்.
இதுதவிர பட்ஜெட் முடிந்த பிறகு 2023 மார்ச் 1ம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் ஊழியர்களின் அகவிலைப்படி குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. அகவிலைப்படி இம்முறை 4 சதவீதம் அதிகரித்து மொத்த அகவிலைப்படி 42 சதவீதம் ஆகலாம் என கூறப்படுகின்றது.
மேலும் படிக்க | 7th Pay Commission: பட்ஜெட்டுக்குப் பிறகு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ நிலுவைத் தொகை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ