Business Tips Tamil : வாழ்க்கையில் வெற்றி பெற ஒரு சில கட்டுப்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் நீங்கள் தினசரி பின்பற்ற வேண்டும். வெற்றி பெற்ற தொழிலதிபர்களிடம் எல்லாம் இந்த பழக்க வழக்கங்கள் இருந்திருக்கின்றன.
1. படிப்பு
வெற்றி பெற்ற தொழிலதிபர்கள் எல்லாமே படிக்கிறார்கள். மிகப்பெரிய ஜாம்பவான்களாக இருப்பவர்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் தினசரி இருக்கும். நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரமாவது படிக்கிறார்கள். அப்போது புதுமையான விஷயங்கள் அவர்களுக்கு தோன்ற ஆரம்பிக்கிறது. அதனை முயற்சி செய்து பார்க்கிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.
2) தூக்கம்
தொழில்முனைவோருக்கு மிக முக்கியமான பழக்கம் நல்ல தூக்கம். நல்ல தூக்கமே உங்களின் தோற்றம் முதல் சிந்தனை எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. நல்ல தூக்கம் இருந்தால் உங்களிடம் முடிவெடுக்கும் பழக்கம் இருக்கும். வெற்றி பெற்ற தொழில்முனைவோர் சரியான நேரத்தில் தூங்கி எழுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த நேரத்தை எதற்காகவும் சமரசம் செய்து கொள்வதில்லை.
மேலும் படிக்க | அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமா? இதோ ஈசியான வழிகள்..!
3) நிதி நிர்வாகம்
ஒருவரிடம் பணப்புழக்கம் அதிகமாக இருக்கிறது என்றாலே அவர்களிடம் நிதி மேலாண்மை இருக்கிறது எனலாம். ஏனென்றால் வெற்றி பெற்ற தொழில்முனைவோர்கள் அனைவரிடமும் நிதி நிர்வாகம் சிறப்பாக இருக்கும். நேர்முக மற்றும் மறைமுக நிதி வருவாயை அறிந்து வைத்திருப்பார்கள். ஓரிடத்துக்கு செல்கிறார்கள் என்றால் அதற்கு ஆகும் பெட்ரோல் செலவு உள்ளிட்ட இதர செலவுகள், வாகன தேய்மானம் முதல் நேரம் வரை அனைத்தையும் தீர்மானித்து அவர்கள் முடிவெடுப்பார்கள்
4) உடற்பயிற்சி
தொழில் முனைவோர் எப்படி தூங்குவதற்கான நேரத்தில் சமரசம் செய்து கொள்வதில்லையோ, அதனைப்போலவே தினசரி உடற்பயிற்சி செய்வதிலும் சமரசம் செய்து கொள்ளமாட்டார்கள். உடல் வலிமையே மன வலிமை என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். அத்துடன் உணவு விஷயத்திலும் மிக கவனமாக இருப்பார்கள். காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் எதை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருப்பார்கள்.
5) நேரம் ஒதுக்குதல்
தொழில் செய்வதாலேயே வெற்றி பெற்றுவிட முடியாது. அந்த தொழிலை எப்படியெல்லாம் முன்னேற்றலாம், எங்கெல்லாம் தவறு நடக்கிறது என்பதை தனிப்பட்ட முறையில் அலசி ஆராய்வதற்கு என ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி பரிசீலனை செய்து கொள்ளும் வழக்கமும் வெற்றி பெற்ற தொழில் முனைவோர்களிடத்தில் இருக்கிறது. அந்த நேரம் அவர்களுக்கான பிரைவசியாக வைத்துக் கொள்வார்கள்.
6) இலக்குகளை நிர்ணயித்தல்
இலக்குகளை நிர்ணயித்து அதனை அடைய முயற்சி செய்வதில் தொழில்முனைவோர்களுக்கே இருக்கும் பழக்கம். வெற்றி பெற்ற தொழிலதிபர்கள் எல்லோரிடமும் இந்த பழக்கம் நிச்சயம் இருக்கிறது. அவர்களுடைய பேச்சிலேயே மிக சாதாரணமாக தாங்கள் ஆரம்ப காலத்தில் நிர்ணயித்த இலக்குகளையும், அதனை அடைய அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் அறிய முடியும். வெற்றி பெற்ற தொழிலதிபர்களுடன் பேசும்போது இதனை அறிந்து கொள்ள முடியும்.
7) கவனம் எதில் செலுத்த வேண்டும்?
உங்களுக்கு எது தேவையோ அதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். அதாவது, எல்லோருக்கும் ஒரே மாதிரியான நேர அமைப்பு தான் இருக்கிறது. வெற்றி குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்கு மட்டும் ஏன் செல்கிறது என்றால் அவர்கள் தங்களின் கவனத்தை எதில் செலுத்த வேண்டும் என்பதில் தெளிவாக செலுத்துகிறார்கள். அதனால் வெற்றி பெறுகிறார்கள்.
8) நெட்வொர்க் உருவாக்குதல்
வெற்றி பெற்ற தொழில் முனைவோர்களிடத்தில் எப்போதும் ஒரு நெட்வொர்க் இருக்கும். அவர்கள் சார்ந்த துறைகளில் வெற்றி பெற்றவர்களிடம் தொடர்பு வைத்திருப்பார்கள். அதனைப் போன்ற நெட்வொர்க்குகளை வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அப்போது தான் அனுபவம் மற்றும் தொழில் வாய்ப்பு குறித்த அறிவிப்புகள் எல்லாம் ஈஸியாக கிடைக்கும்.
9) தோல்வியை எதிர்கொள்கிறார்கள்
வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் தோல்விகளை பல எதிர்கொண்டவர்களாகவே இருப்பார்கள். திடீரென எந்த வெற்றியும் உங்களுக்கு வந்து சேராது. பல தோல்விகள் மூலம் கிடைக்கும் அனுபவம் உங்களை சிறந்த வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும். அதனால் எப்போதும் தோல்வி அடைவதில் துவண்டு போகாதீர்கள். நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கையை வெற்றி பெற்ற தொழிலதிபர்களிடம் இருந்து கற்றுக் கொள்வது மிக மிக முக்கியம்
மேலும் படிக்க | ஒவ்வொரு பெண்ணும் இந்த பொருட்களை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ