ஒல்லி பெல்லி வயிற்றுக்கு மாளவிகா மோகனன் குடிக்கும் பானம்! வீட்டிலேயே செய்யலாம்..

Malavika Mohanan Weight Loss Diet Tips : பிரபல நடிகை மாளவிகா மோகனனின் டயட் மற்றும் ஃபிட்னஸ் சீக்ரெட் குறித்து இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Aug 24, 2024, 04:36 PM IST
  • மாளவிகா மோகனனின் வெயிட் லாஸ் டிப்ஸ்
  • அவர் தினமும் குடிக்கும் பானம்!
  • தினமும் செய்யும் உடற்பயிற்சிகள்!
ஒல்லி பெல்லி வயிற்றுக்கு மாளவிகா மோகனன் குடிக்கும் பானம்! வீட்டிலேயே செய்யலாம்.. title=

Malavika Mohanan Weight Loss Diet Tips : தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர், மாளவிகா மோகனன். பேட்ட படம் மூலம் அறிமுகமான இவர், தற்போது கோலிவுட் திரையுலகின் கவனிக்கத்தக்க ஹீரோயினாக வளர்ந்து வருகிறார். கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர், தற்போது தமிழிலும் மலையாளத்திலும் அடுத்தடுத்து சில படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் தங்கலான் திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்காக உடல் எடையை வெகுவாக குறைத்த அவர், தற்போது வரை அதே ஃபிட்னஸை பராமரித்து வருகிறார். 

நடிகைகள், இயல்பாகவே தங்களின் உடல் எடை குறித்து கவனத்துடன் இருப்பர். இப்படி இருப்பது, அழகு பராமரிப்புக்காக என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இப்படி உடலை ஃபிட்டாக வைத்துக்கொண்டால்தான் நெடுங்காலம் வாழ முடியும். எனவே, உடலை ஒல்லியாக வைத்திருக்க மாளவிகா மோகனன் செய்யும் விஷயங்கள் குறித்தும் அவரது உணவு பழக்கங்கள் குறித்தும் இங்கு பார்ப்பாேம். 

உடற்பயிற்சி கூடம்:

மாளவிகா, தனது ஃபிட்னஸ் விஷயத்தில் சமரசமே செய்து கொள்ள மாட்டாராம். தினமும் ஜிம் செல்வதை வழக்கமாக்கி கொண்டுள்ள இவர் அங்கு சென்று வெயிட் லிஃப்டிங் மற்றும் கார்டியோ பயிற்சிகளை செய்வாராம். 

யோகா மற்றும் நடைப்பயிற்சி:

மாளவிகா மோகனன், தன் உடலை ஹெல்தியாக வைத்திருக்க தினமும் யோகா மற்றும் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். தன்னை ஆக்டிவாக வைத்துக்கொள்ள இவை உதவுவதாகவும் இவர் கூறுகிறார். வாக்கிங் செல்வது உடல் எடை ஏறாமல் தடுப்பதுடன், கால்களை வலுவாக்கவும் உதவும்.

மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க சினேகா செய்யும் விஷயம்! அட, அசத்தலா இருக்கே..

ஏரோபிக் உடற்பயிற்சிகள்:

மாளவிகா மோகனன், தனக்கு தொப்பை ஏறாமல் இருக்க, தினமும் ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்வாராம். இதனால், அவர் உடல் ஃபிட்டாக இருப்பதுடன், கொழுப்பும் குறைகிறதாம்.

மாளவிகா அருந்தும் பானம்:

நடிகை மாளவிகா மோகனன், தினமும் தனது நாளை ஒரு ப்ளாக் காஃபியுடன் ஆரம்பிப்பாராம். சில சமயங்களில் அவர் ப்ளாக் டீ குடிப்பதாகவும் கூறப்படுகிறது. படப்பிடிப்பின் இடையில் கூட இவர் இதை குடிப்பாராம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு அருமருந்தாக திகழ்கிறது ப்ளாக் காஃபி. இதை குடித்து விட்டு உடற்பயிற்சி செய்தால் கலோரி குறைந்து, உடல் எடையும் குறையும் என நம்பப்படுகிறது. இதை, நாம் வீட்டிலேயே செய்யலாம்.

டயட்:

உடல் எடையை குறைப்பதற்கும், ஃபிட்டாக வைத்துக்கொள்வதற்கும் நாம் சாப்பிடும் உணவு மிகவும் முக்கியமாகும். மாளவிகா, தன் டயட்டில் புரதம் நிறைந்த உணவுகளையும், கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கும் உணவுகளையும் அதிகமாக எடுத்துக்கொள்வாராம். வெளியில் சாப்பிடுவதை விட வீட்டில் செய்யும் உணவுகளை அதிகம் விரும்பும் மாளவிகா, சாலட்டை தனது மதிய உணவாக எடுத்துக்கொள்வாராம். 

ஹெல்தியான பானங்கள்..

மாளவிகா, சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர் பானங்களை அரவே தவிர்ப்பாராம். பழச்சாறு, இளநீர் ஆகியவை இவரது உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக்கொள்ள உதவுகிறதாம். இது, அவர் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான ஆற்றலை அளிப்பதாக கூறப்படுகிறது. 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)ச்

மேலும் படிக்க | Jyothika : உடல் எடையை குறைக்க ஜோதிகா ‘இதை’ தினமும் குடிப்பாராம்! எளிதான இயற்கை பானம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News