அமேசான் தலைவர் ஜெஃப் பெசோஸ் இந்தியாவில் புதிய முச்சக்கர வண்டி மின்சார விநியோக ரிக்ஷாவை அறிமுகம் செய்துள்ளார். மேலும் இதன்மூலம் இந்திய இளைஞர்களுக்கு 1 மில்லியன் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்களன்று பெசோஸ் 34 வினாடிகள் நீளமான வீடியோ ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவில் அவர் அமேசான் நிறுவனத்தின் புதிய விநியோக இ-ரிக்ஷாவினை இயக்க, அவருடன் நிறுவனத்தின் ஊழியர்களும் இந்த இ-ரிக்ஷாவினை இயக்குகின்றனர். மேலும் இந்த வீடியோவிற்கு தலைப்பு இடுகையில்., "ஏய், இந்தியா. நாங்கள் எங்கள் புதிய மின்சார விநியோக ரிக்ஷாக்களை வெளியிடுகிறோம். முழுமையாக மின்சாரம் கொண்டு இயங்கும் வானம், கார்பன் இல்லை." என குறிப்பிடப்பட்டுள்ளது.
In an effort to reduce carbon emissions, we're bringing 10,000 electric delivery vehicles by 2025. #Climat pic.twitter.com/3ChzjRGMXi
— Amazon India News (@AmazonNews_IN) January 21, 2020
பிரதான இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், இதுகுறித்து தெரிவிக்கையில் இந்த புதிய வாகனங்கள் வரும் 2025-க்குள் இந்தியவில் 10000 சாலைகளில் தனது சேவையினை செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பான அறிக்கையில்., "முச்சக்கர வண்டி மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 10,000 மின்சார வாகனங்களை இந்தியாவில் அசல் உபகரண உற்பத்தியாளர்களால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது" என்று அமேசான் குறிப்பிட்டுள்ளது.
Hey, India. We’re rolling out our new fleet of electric delivery rickshaws. Fully electric. Zero carbon. #ClimatePledge pic.twitter.com/qFXdZOsY4y
— Jeff Bezos (@JeffBezos) January 20, 2020
2020-ஆம் ஆண்டில், இந்த வாகனங்கள் இந்தியாவின் 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் (டெல்லி NCR, பெங்களூர், ஹைதராபாத், அகமதாபாத், புனே, நாக்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில்) இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜனவரி 14-ம் தேதி இந்தியாவுக்கு வந்த பெசோஸ், நாட்டல் மூன்று நாள் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்திற்கு பின்னர், பெசோஸ் ஒரு திறந்த கடிதத்தில் அமேசான் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் ஒரு மில்லியன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று தெரிவித்தார். இந்நிலையில் தற்போது அமேசானின் இ-ரிக்ஷா விநியாகம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.