2022 இல் வேலை, தொழிலில் வெற்றி கொடி நாட்ட உள்ள ராசிகள் இவர்களே

2022 ஆம் ஆண்டு தொழில் மற்றும் உத்யோத்தின் அடிப்படையில் எப்படி இருக்கும்? கடின உழைப்பால் வெற்றி வருமா அல்லது எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்குமா என்பதை இங்கே பார்ப்போம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 1, 2022, 08:54 AM IST
2022 இல் வேலை, தொழிலில் வெற்றி கொடி நாட்ட உள்ள ராசிகள் இவர்களே title=

புதுடெல்லி: 2022 ஆம் ஆண்டு தொடங்கிவிட்டது, இந்த ஆண்டு உங்களுக்கு என்ன பலன் தரப்போகிறது என்பதை நாம் இன்று இங்கே காணப்போகிறோம். குறிப்பாக புத்தாண்டில் தொழில் ரிதியாக எப்படி இருக்கும், பதவி உயர்வு அல்லது இன்க்ரிமென்ட் கிடைக்குமா, அதே சமயம் தொழிலதிபர்களுக்கு இந்த வருடம் லாபமாக இருக்குமா அல்லது நஷ்டத்தை சந்திக்க நேரிடுமா?. வாருங்கள் 12 ராசிகளுக்கும் இந்த வருடம் தொழில்-வியாபாரம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் சராசரியாக இருக்கும். கடின உழைப்பு மட்டுமே வேலையில் பலனைத் தரும். எனவே, கடின உழைப்பாளிகளுக்கு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு இருக்கலாம். வருமானமும் அதிகரிக்கும். நேர்மறை சிந்தனை நல்ல வெற்றியைத் தரும்.

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் தொழில் ரீதியாக சிறந்த வருடமாக அமையும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரியின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பதவி உயர்வுக்கான வலுவான வாய்ப்பு உள்ளது. உங்களின் முன்னேற்றமான முன்னேற்றம் சிலருக்கு பிடிக்காது என்றாலும், உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்தி முன்னேறுவது நல்லது. 

ALSO READ | MARS TRANSIT: இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட அலை வீசப்போகிறது 

மிதுனம்: 2022-ம் ஆண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக ஏமாற்றத்தையே தரும். ஏற்ற தாழ்வுகள் இருக்கும். நேர்மறை சிந்தனை மட்டுமே இந்த சிரமங்களிலிருந்து உங்களை விடுவிக்கும். வியாபாரிகளுக்கும் இந்த ஆண்டு சுமாராகவே இருக்கும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் நல்ல முன்னேற்றம் தரும். பெரிய நிறுவனத்தில் நல்ல பதவி கிடைக்கும். பதவி உயர்வு ஏற்படும். இந்த நேரம் வியாபாரிகளுக்கும் நன்றாக இருக்கும். கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள். நீண்ட பயணங்கள் இருக்கலாம்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் தொழில் ரீதியாக ஒரு மைல் கல்லாக அமையும். உங்கள் பணி பாராட்டப்படும், இது பதவி உயர்வுக்கான வழியைத் தரும். வெளிநாட்டில் பணிபுரியும் கனவு நிறைவேறும். புதிய தொழில் தொடங்க இது நல்ல நேரம்.

கன்னி: இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் சுமாராகவே இருக்கும். கடின உழைப்புக்குப் பிறகுதான் வெற்றி கிடைக்கும். வியாபாரத்திலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். இருப்பினும், ஏற்ற தாழ்வுகள் இருக்கும். கடினமாக உழைத்து முடிவுகளுக்காக பொறுமையாக காத்திருங்கள். வணிகர்களுக்கும் இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களின் தொழில் இந்த வருடம் சிறப்பாக இருக்கும். புதிய வேலை கிடைக்கலாம். தொழிலதிபர்களும் அதிக லாபம் அடைவார்கள். 

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். அறிவும் பெருகும், அதை உங்கள் வேலையில் பயன்படுத்துவதும் நன்மை தரும். எதிர்பாராத வாய்ப்புகள் பெரிய பலனைத் தரும். பெரிய வெற்றியைப் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.

மகரம்: மகர ராசிக்காரர்கள் முக்கிய தொழில் முடிவுகளை எடுப்பதில் குழப்பத்திலேயே இருப்பார்கள். இதனால் வேலையில் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் போகும். இடமாற்றமும் நிகழலாம். 

கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் பெரும் வெற்றியைப் பெறுவார்கள். டீலர்ஷிப் பணியுடன் தொடர்புடையவர்கள் நல்ல லாபம் ஈட்டுவார்கள். ஒட்டுமொத்தமாக, இந்த ஆண்டு வேலை-வியாபாரம் இரண்டிலும் சிறப்பாக இருக்கும்.

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் அபரிமிதமான முன்னேற்றத்தை தரும். உங்களின் திறமைகள் அதிகரித்து அனைவரின் கவனமும் உங்களை நோக்கியே இருக்கும். சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். இந்த ஆண்டு தொழிலதிபர்களுக்கும் நல்ல பலன் தரும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை ஆகும். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | இந்த ராசிக்கார பெண்கள் கணவனை அடக்கி ஆள்வார்கள்: உங்க மனைவிக்கு இந்த ராசியா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News