ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) டிசம்பர் 2022 மாதத்திற்கான விடுமுறைப் பட்டியலின்படி, ஆன்லைன் வங்கிச் சேவைகள் தொடர்ந்து செயல்படும், ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்கு வங்கிகள் இயங்காது. நாடு முழுவதும் அனுசரிக்கப்படும் விடுமுறைகள் சில வங்கிகளுக்கு பொருந்தினாலும், உள்ளூர் விடுமுறை காரணமாக சில வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. வங்கி தொடர்பான வேலைகள் மக்களுக்கு இருப்பதால் டிசம்பர் மாதத்தில் எந்தெந்த தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை தெரிந்துகொண்டால் அவர்களுக்கு வீண் அலைச்சல் இருக்காது. இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) விடுமுறை காலண்டர் பட்டியலின்படி டிசம்பர் மாதம் மொத்தம் 14 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் மற்றும் மீதமுள்ள நாட்கள் வார இறுதி நாட்கள் ஆகும்.
இந்த நவம்பர் மாதம் வங்கிகளுக்கு 10 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் வரும் டிசம்பர் மாதம் கொஞ்சம் கூடுதலாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஷில்லாங்கில் உள்ள பா-டோகன் நெங்மிஞ்சா சங்மாவுக்கு வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருக்கலாம் ஆனால் கோவா, பீகார் அல்லது பிற மாநிலங்களில் அந்த நாளில் வங்கிகள் மூடப்படாது.
மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு வழங்கிய முக்கிய செய்தி, கட்டாயம் படிங்க
டிசம்பர் மாத வங்கி விடுமுறை பட்டியல்:
டிசம்பர் 3: புனித பிரான்சிஸ் சேவியரின் விழா
டிசம்பர் 12: பா-டோகன் நெங்மிஞ்சா சங்மா
டிசம்பர் 19: கோவா விடுதலை நாள்
டிசம்பர் 24: கிறிஸ்துமஸ் விழா
டிசம்பர் 26: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்/லோசூங்/நாம்சூங்
டிசம்பர் 29: குரு கோவிந்த் சிங் ஜி பிறந்தநாள்
டிசம்பர் 30: யு கியாங் நங்பா
டிசம்பர் 31: புத்தாண்டு ஈவ்
சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள்:
டிசம்பர் 10: இரண்டாவது சனிக்கிழமை
டிசம்பர் 4: ஞாயிறு
டிசம்பர் 11: ஞாயிறு
டிசம்பர் 18: ஞாயிறு
டிசம்பர் 24: நான்காவது சனிக்கிழமை
மேலும் படிக்க | டிசம்பர் 1 முதல் மாற இருக்கு 5 முக்கியமான மாற்றங்கள் என்னென்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ