Weight loss Tips In Tamil : ஆயுர்வேதத்தின் படி, துளசி மற்றும் கறிவேப்பிலை இவை இரண்டுமே மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அவை இன்றும் இந்தியாவில் மூலிகைகளாக உட்கொள்ளப்படுகின்றது. இவற்றை தினமும் உட்கொள்வதால் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இதனுடன், இந்த இலைகள் உடல் எடை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே நீங்களும் ஆயுர்வேத முறையில் உடல் எடையை குறைக்க விரும்பினால் துளசியை சாப்பிடலாமா அல்லது கறிவேப்பிலையை சாப்பிடலாமா என்ற குழப்பத்தில் இருந்தால், இந்த பதிவில் இதற்கான பதிலைப் பெறுங்கள்.
துளசி இலைகள்: மருத்துவ குணம் கொண்ட துளசி இலைகள் பல நோய்களுக்கு மருந்தாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த துளசியில் (Basil) வைட்டமின்கள், தாதுக்கள், லுடீன், பீட்டா கரோட்டின், ஜியாக்சாண்டின் மற்றும் பீட்டா-கிரிப்டோக்சாந்தின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இதன் மூலம் உடல் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட முடியும்.
துளசி இலையின் நன்மைகள்:
துளசி இலைகளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால் இவை இதய நோய்கள், புற்றுநோய், மூட்டுவலி, சுவாசம் பிரச்சனை, சிறுநீர் கோளாறு, வயிறு உப்புசம் மற்றும் தோல் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
மேலும் படிக்க | அடம்பிடிக்கும் தொப்பை கொழுப்பை விரட்டி அடிக்கும் வெள்ளரி: இப்படி சாப்பிடுங்க போதும்
உடல் எடையை குறைக்க உதவும்: துளசி இலைகளை உட்கொள்வது வயிற்றுக்கும் நன்மை பயக்கும். இதை சாப்பிடுவதால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். அதனுடன் ஊடக எடை குறைக்கவும் இந்த துளசி உதவுகிறது. எனவே தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 முதல் 4 துளசி இலைகளை உட்கொள்ளவும்.
கறிவேப்பிலை: கறிவேப்பிலை (Curry Leave) இந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுத்தம் படும் இலையாகும். இதில் ஏராளமான நார்ச்சத்து நிரம்பியிருப்பதுடன் ஹைப்போ-கிளைசெமிக் பண்புகளை இவை கொண்டுள்ளது, இது இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவுகிறது.
கறிவேப்பிலையின் நன்மைகள்: கறிவேப்பிலையில் காணப்படும் அதிக நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகளை குளுக்கோஸாக உடைக்கும் செயல்முறையை மெதுவாக்குகிறது, இதனால் இரத்த சர்க்கரை அளவை நம்மால் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். நார்ச்சத்துடன், கறிவேப்பிலையில் புரதம், இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் மல்டிவைட்டமின்கள் போன்ற கூறுகள் நிறைந்துள்ளது.
உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை: கறிவேப்பிலையில் உள்ள தனிமங்கள் உடல் பருமனை குறைக்க உதவும். இதனால் இந்த இலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில், 5 அல்லது 6 கறிவேப்பிலையை மென்று, வெதுவெதுப்பான நீரை குடித்து வரலாம் அல்லது இந்த இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்தும் குடிக்கலாம். இப்படி தினமும் குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறையத் தொடங்கும்.
இந்நிலையில் துளசி இலையை ஒப்பிடும்போது, கறிவேப்பிலை மூலம் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தேங்காய் எண்ணெயில் இதை கலந்து தடவினால் முகம் பளபளக்கும், இன்றே ட்ரை பண்ணுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ