வீடியோ; கிறிஸ்துமஸ் மரங்களை புதுமையாக அலங்கரிக்க வேண்டுமா!

கிறிஸ்துமஸ் மரங்களை புதுமையாக அலங்கரிக்க வேண்டுமா! வாங்கவேண்டிய பொருட்கள்!

Last Updated : Dec 11, 2017, 05:37 PM IST
வீடியோ; கிறிஸ்துமஸ் மரங்களை புதுமையாக அலங்கரிக்க வேண்டுமா!  title=

கிறிஸ்துமஸ் மரங்களை புதுமையாக அலங்கரிக்க வேண்டுமா! வாங்கவேண்டிய பொருட்கள்!
கிறிஸ்மஸ் சமயத்தில் வீடுகள், தேவாலயங்கள், பொது இடங்களில் கிறிஸ்மஸ் மரத்தை அலங்கரித்து காட்சிக்கு வைப்பது வளமை. முதன் முதலில் ஜெர்மனியில் தான் இந்த அலங்காரங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

1521ஆம் ஆண்டு செலஸ்லாட்டில் என்ற ஊரில் இருந்த செயின்ட் ஜார்ச் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் மரம் வைக்கப்பட்ட தற்கு ஆதாரம் உள்ளது.ஒரு காலத்தில் கிறிஸ்துமஸ் மரத்திற்கு ஒளி கொடுக்க மெழுகு வர்த்திகளை ஏற்றி வைத்தனர். 

மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு சகஜமானதும், மின் விளக்குகள் கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரிக்க ஆரம்பித்தன. 19ம் நூற்றாண்டில் தான் மற்ற நாடுகளில் பரவின.

வீட்டில் வைக்கும் கிறிஸ்மஸ் மரத்தில் அப்பிள்கள், தின்பண்டங்கள், அன்பளிப்புகள் அமைத்திருக்கும்.

கிறிஸ்மஸ் மரங்கள் தேவாலயங்களில் மின்விளக்குகளில் ஜோலிக்கும். அபுதாபி எமிரேட்ஸ் ஹேட்டல் ஒன்றில் 43 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தில், பல மில்லியன் மதிப்புக்கு தங்கத்தையும், மதிப் புமிக்க நவரத்தினங்களையும் இணைத்து அழகு கூட்டியிருப்பர்.

ஜப்பானின் டோக்கியோவில் 12 மில்லி யன் டொலர் மதிப்புமிக்க தங்கத்தால் ஆன கிறிஸ்மஸ் மரத்தை ஒரு நகைக்கடையில் வைத்திருந்தனர். பொதுவாக கிறிஸ்துமஸ் மரங்கள் பச்சை பசேல்என்றே புதியதாக காட்சியளிக்கும்.
உலகின் மிகப் பெரிய மிதக்கும் கிறிஸ்து மஸ் மரம் பிரேசில் நாட்டின் ரியோடிஜனரி யோவில் வைக்கப்பட்டுள்ளது. இது கின் னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. 

85 மீட்டர் உயரமும் 542 தென் எடையும் கொண்ட இதனை 3.3 மில்லியன் மின் விளக்குகள் அலங்கரித்துள்ளன.

தெய்வமாக கருதும் கிறிஸ்துமஸ் மரம்;

மனித வழிபாட்டு முறைகளின் துவக்கம் இயற்கை வழிபாடாகும். மனிதன் இயற்கையை வணங் கினான். ஸ்காண்டி நேவியர் கள் மரத்தை வழிபடுபவர்கள். அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாறினார்கள். கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளினபடி கலாச்சார மயமாகுதல், பண்பாடு மயமாகுதல் என்ற நெறிப்படி புதிய கிறிஸ்தவ மதத்திலும் ஸ்காண்டி நேவிய மக்களுக்கு மரத்தை வழிபட வழியிருந்தது. 

அவர்கள் மரங்களை மின் விளக்குகளால் அலங்கரித்து வணங்கினர். 500 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மானியர்கள் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்க ஆரம் பித்தனர். 1841-ம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் ஆல்பர்ட், தனது ராஜமுறை கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் கிறிஸ்து மஸ் மரத்தை அறிமுகப்படுத் தினார்.

இந்த கிறிஸ்துமஸ் மரம் வருடா வருடம், புதுப்புது தொனிப்பொருட்களில் அமைக்கப்படுகிறது. உதாரணமாக தண்ணீர், காற்று, காடுகள், மனித இனம் சார்ந்த தீம்கள் மக்களை கவர்ந்துள்ளன. உதாரணமாக தண்ணீர் என்றால் அது சார்ந்த திமிங் கலங்கள், கடற்குதிரைகள், மீன்கள், கிறிஸ்துமஸ் மரத்தில் பிரதானமாய் காட்சியளிக்கும்.

பொதுவாக மிதக்கும் கிறிஸ்துமஸ் மரங்கள் கடலிலிருந்து மணல் திட்டுகளால் பிரிக்கப்பட்ட உப்பு ஏரியில் தான் வைக்கப்படும், இதனை ஒரே இடத்தில் பார்வைக்கு வைக்காமல், மேலும் இரண்டு இடங்களுக்கு நகர்த்தி காட்சிக்கு வைப்பர்.

 

 

 

 

Trending News