PNB கணக்கு வைத்திருப்பவர்களுக்கு Big News, லட்சங்களில் உடனடியாக கடன் கிடைக்கும்

PNB: நீங்கள் அவசர அவசரமாக பணத்தின் தேவையை உணர்ந்தால், PNB உங்களுக்கு சிறந்த வசதியை வழங்குகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 19, 2021, 11:04 AM IST
PNB கணக்கு வைத்திருப்பவர்களுக்கு Big News, லட்சங்களில் உடனடியாக கடன் கிடைக்கும் title=

புதுடெல்லி: PNB: பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சலுகைகளை வழங்குகிறது. PNB வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு அவசர காலத்தில் பணம் தேவைப்பட்டால், உங்களுக்காக வங்கி சிறப்பு வசதியை கொண்டு வந்துள்ளது. 

தற்போது PNB வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.8 லட்சம் வரை உடனடி கடன் வழங்கும் வசதியை எளிதாகிது. உங்களுக்கும் பணம் தேவைப்பட்டால், இந்த சிறப்பு வசதியின் கீழ் நீங்கள் வங்கியில் இருந்து பணத்தை சேகரிக்கலாம். நீங்கள் அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

ALSO READ | மலிவு விலையில் வீடு வாங்கணுமா? PNB-ன் e-auction-ல் கலந்துகொள்ளுங்கள்!!

பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank)  இன்ஸ்டா லோன் மூலம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.8 லட்சம் வரை கடன் வழங்குகிறது. இந்த வசதியின் கீழ் நீங்களும் தனிநபர் கடனைப் பெற விரும்பினால், நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் மொபைல் எண் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிடுவது மட்டுமே. இதற்குப் பிறகு நீங்கள் எளிதாகக் கடன் பெறுவீர்கள். வங்கி தனது செயல்முறையை ட்வீட் மூலம் விளக்கியுள்ளது.

 

 

கடனுக்கு விண்ணப்பிப்பது உணவை ஆர்டர் செய்வது போல எளிதானது!

குறைந்த வட்டி விகிதத்தில் PNB இன்ஸ்டா கடனுக்கு விண்ணப்பிக்கவும்.

இவர்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு வசதி
* PNB இன் அற்புதமான வசதியை பயன்படுத்திக் கொள்ள, வாடிக்கையாளர் மத்திய அரசு, மாநில அரசு அல்லது பொதுத்துறை நிறுவன ஊழியராக இருக்க வேண்டும்.
* இந்த கடன் சில நிமிடங்களில் கொடுக்கப்படும்.
* இந்த கடனின் வசதி 24*7 கிடைக்கும்.
* இதன் கீழ் வாடிக்கையாளர்களுக்கு ரூ.8 லட்சம் வரை கடன் கிடைக்கும்
* இதில் செயலாக்கக் கட்டணம் பூஜ்யம் ஆகும்.

ALSO READ:7th Pay Commission: ஊழியர்களின் கிராஜுவிட்டியில் சூப்பர் ஏற்றம், முழு கணக்கீடு இதோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News