தினமும் எத்தனை நிமிடங்கள் வாக்கிங் செய்தால் நல்லது...? அவசியம் படிங்க

Lifestyle Tips: உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ளவும், ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கும் தினமும் எவ்வளவு நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 8, 2024, 09:34 AM IST
  • காலையில் அல்லது மாலையில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.
  • உடல்நல ரீதியாகவும், மனநல ரீதியாகவும் இது உங்களுக்கு உதவும்.
  • தொடக்கத்தில் மெதுவாக நடந்து பழகுவது காயங்களை தடுக்கும்.
தினமும் எத்தனை நிமிடங்கள் வாக்கிங் செய்தால் நல்லது...? அவசியம் படிங்க title=

Lifestyle Tips In Tamil: உடல் ஆரோக்கியமாக இருக்கவும், வாழ்க்கைமுறையில் எவ்வித சிக்கலும் இல்லாமல் இருக்கவும் உடற்பயிற்கு மேற்கொள்வது ஒரு முக்கிய விஷயமாகும். சில உடற்பயிற்சி உபகரணங்களை வீட்டில் வைத்திருப்பார்கள், அதனால் வீட்டிலேயே உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள். ஒருசில பேர் ஜிம்மிற்கு சென்று தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுவார்கள். 

மேலும், உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் பலரும் காலையில் அல்லது மாலையில் நடைப்பயிற்சியையும் (Walking Exercise) மேற்கொள்வார்கள். மற்ற சிறு சிறு உடற்பயிற்சியுடன் நடைபயிற்சியை மட்டும் செய்யும் சிலரையும் உங்களால் பார்க்க முடியும். ஒரு சிலர் காலையில் வாக்கிங் செல்ல வீட்டில் இருந்து பல நிமிடங்கள் நடந்துசென்று வருவார்கள். இப்போது ஸ்மார்ட் யுகம் என்பதால் எவ்வளவு கி.மீ., எவ்வளவு ஸ்டெப்ஸ் என்பதை எளிதாக தெரிந்துகொள்ள முடிகிறது. அதனை கணக்கீடு செய்தும் சிலர் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். 

ஆனால், நடைபயிற்சிக்கு பழக்கப்பட்டவர்களுக்கும் சரி, புதிதாக நடைப்பயிற்சி செய்வோருக்கும் சரி எவ்வளவு தூரம் நடந்தால் நல்லது என்பது பெரியளவில் தெரியாது. அவரவர்களுக்கு என்று சில இலக்குகளை வைத்திருப்பார்கள். அதை நோக்கியே அவர்கள் தொடர்ந்து நடைபயிற்சி மேற்கொள்வார்கள். அந்த வகையில், தினமும் எவ்வளவு தூரம் அல்லது எவ்வளவு நிமிடம் நடந்தால் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிக்க | கருப்பு திராட்சை vs பச்சை திராட்சை : எதை யார் சாப்பிடலாம்?

தினமும் 30 நிமிடங்கள்

உங்களின் வாழ்க்கைமுறை, உடற்தகுதி, நீங்கள் அடைய விரும்பும் உடல் சார்ந்த இலக்குகள் ஆகியவையே ஒருநாளுக்கு எவ்வளவு தூரம் நடக்கும் என வேண்டும் என்பதை முடிவு செய்யும் எனலாம். மிகுந்த வேகத்துடன் இல்லாமல் நிதானம் கலந்த சிறு வேகத்துடன் வாரத்தின் பல நாள்களில் சுமார் 30 நிமிடங்கள் வரை நடப்பது பொதுவாக ஃபிட்னஸை அளிக்கும் எனலாம்.

அதாவது இதன்மூலம் வாரத்திற்கு 150 நிமிடங்கள் என நீங்கள் வைத்துக்கொள்ளலாம். இது அமெரிக்காவின் இதய கூட்டமைப்பு மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் ஆகியவற்றின் வழிமுறைகளும் வாரம் 150 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்வதையே பரிந்துரைக்கிறது. இதன்மூலம், இதயம் சார்ந்த நோய்கள் தாக்கும் அபாயம் குறைக்கப்படுகிறது. 

வாரத்திற்கு 300 நிமிடங்கள்

நீங்கள் புதிதாக நடைப்பயிற்சி மேற்கொள்கிறவர் எனில் முதலில் 20 - 30 நிமிடங்களுக்கு மெதுவாக நடந்து பழகுங்கள். அதன்பின் நேரத்தையும் வேகத்தையும் சிறிது சிறிதாக கூட்டுவதன் மூலம் காயம் ஏற்படுவதை தடுக்க முடியும். பழக்கப்பட்டவர்கள் ஒரு நீண்ட நடைபயிற்சியையும் மேற்கொள்ளலாம். குறைவான இடைவெளியுடன் 60 நிமிடங்கள் வரை சற்று வேகத்தை அதிகரித்து நடக்கலாம். அதாவது, வாரம் 300 நிமிடங்கள் நடந்தால் அதன் மூலம் கிடைக்கும் உடல்நல நன்மைகள் என்கிறது அமெரிக்காவின் இதயம் கூட்டமைப்பு. 

இருப்பினும் இது தனிப்பட்ட நபர்களின் விருப்பமே ஆகும். எவ்வளவு தூரம் அல்லது எவ்வளவு நிமிடங்கள் நடக்கலாம் என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதுவும் மெதுவாக நடக்கலாமா, வேகமாக நடக்கலாமா என்பதும் உங்களின் உடற்தகுதி சார்ந்ததாகும். தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் இதய துடிப்பு சீராக இருக்கும், அதனால் ரத்த ஓட்டமும் சீராக இருக்கும். ரத்த அழுத்தம் குறையும், கொலஸ்ட்ரால் அளவும் குறையும்.

நன்மைகளும், தவறுகளும்...

நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்புபவர் என்றால் நடைபயிற்சியின் மூலம் கலோரிகளை குறைப்பீர்கள். இதனால் உடல் எடை குறையலாம் அல்லது உடல் எடை ஏறாமல் இருக்கலாம். உடல் எடை குறைப்புக்கு உணவுமுறை கட்டுப்பாடும் தேவை. நடைபயிற்சி கால் தசைகளை வலிமையாக்கும், உடலின் நெகிழ்வுத்தன்மையை கூட்டும்.  என்டோர்பின்ஸ் உங்களின் உடலில் அதிகம் வெளியாகி மன அழுத்தம், கவலை ஆகியவை நீங்கள் மன அமைதி கிடைக்கும் 

தினமும் பல மணி நேரங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு நடைபயிற்சி அவசியம். உடல் உழைப்பு இல்லாத நபர்களும் நடைபயிற்சியை மேற்கொள்ளலாம். சிற்சில உடற்பயிற்சிகளுடன் நடைபயிற்சி மேற்கொண்டால் மட்டுமே முழு பலனும் கிடைக்கும், காயங்களும் தவிர்க்கப்படும். நடைபயிற்சியின் போது சில தவறுகளை நடக்கும், அதை திருத்தி நேர்த்தியாக நடப்பது பலனை அதிகரிக்கும். 

(பொறுப்பு துறப்பு: நடைபயிற்சி குறித்த இந்த செய்தி சில பொது தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது. இதனை பின்பற்ற நினைப்பவர்கள் முறையான மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதனை ZEE NEWS உறுதி செய்யவில்லை)

மேலும் படிக்க | 23 கிலோ வரை எடையை குறைத்த நடிகை... அதுவும் பிரசவத்திற்கு பின் - எப்படி தெரியுமா?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News