வீட்டுக்கடன்: சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாகும். சிலர் கொஞ்ச கொஞ்சமாக சேமித்து, அதன் பிறகு சொந்த வீடு வாங்குகிறார்கள். சிலர் வீட்டுக்கடன் மூலம் சொந்த வீடு வாங்குகிறார்கள். நீங்கள் மாத சம்பவம் பெறுபவரா? வீட்டுக்கடன் மூலம் தங்கள் கனவை நிறைவேற்ற நினைப்பவரா? அப்படி என்றால், முதலில் நீங்கள் வீட்டுக்கடன் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். ரூ. 20 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் அல்லது அதற்கு மேலும் வருமானம் ஈட்டுபவர்கள் மாதத் தவணை மூலம் வீட்டுக் கடனை (Home loan EMI) பெறலாம்.
இன்று நாம் மாதம் ரூ.25000 சம்பளம் பெறுபவர்கள் (Home Loan on Rs 25000 Monthly Salary) வீட்டுக் கடனை எப்படி பெறுவது? மற்றும் அதற்கான கணக்கீடு குறித்து பார்க்கப் போகிறோம். வீட்டுக் கடனைப் பெறுவதற்கான எளிதான மற்றும் முதலான விதி என்னவென்றால், உங்கள் வருமானத்தில் 25 சதவீதத்திற்கு மேல் உங்களுக்கான EMI இருக்கக்கூடாது. மீதமுள்ள உங்கள் சம்பளத்தை அவசர மற்றும் பிற செலவுகளுக்காக சேமித்து வைக்க வேண்டும். உங்கள் மாத வருமானம் 50 ஆயிரம் ரூபாய் எனில், அதில் 25 சதவீதம் அதாவது 12 ஆயிரம் ரூபாய் மட்டுமே இஎம்ஐ இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
பஜாஜ் ஃபின்சர்வின் கூற்றுப்படி, வீட்டுக் கடன் தொகை உங்கள் சம்பளத்தைப் பொறுத்தது. உங்களுக்கு எவ்வளவு கடன் கொடுக்க வேண்டும் என்பது உங்கள் வருமானத்தின் அடிப்படையில் (Loan depends on Your Income) தீர்மானிக்கப்படுகிறது. கடன் வழங்கும் நிறுவனம் உங்கள் மாத சம்பளத்தை அடிப்படையாகக் கருதுகிறது மற்றும் அதனுடன் கருணைத் தொகை, பிஎப் (PF), இஎஸ்ஐ (ESI) கணக்கீடு செய்யப்படுகிறது.
ரூ. 25000 சம்பளம் - வீட்டுக் கடன் எவ்வளவு கிடைக்கும்?
உங்கள் மாத சம்பளம் ரூ 25000 எனில் எந்த ஒரு வங்கியும் உங்களுக்கு ரூ 18.64 லட்சத்தை வரை கடனாக கொடுக்கலாம். அதாவது 25 வருடங்கள் கடன் வாங்கினால், 25000 சம்பளத்தில் 18.64 லட்சமும், அதுவே மாத சம்பளம் (Take Home Salary) ரூ. 50,000 ரூபாயாக இருந்தால் 37.28 லட்சம் வரையிலும் கடன் பெறலாம். டேக் ஹோம் சம்பளம் அதிகமாக இருப்பதால், வீட்டுக் கடன் தொகையும் அதிகரிக்கும்.
ALSO READ | குறைந்த வட்டியில் வீடு மற்றும் வாகனக் கடன்களை வழங்கும் Bank of Maharashtra
CIBIL ஸ்கோர் முக்கியம்:
வீட்டுக் கடன் வாங்கும்போது நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. கிரெடிட் ஸ்கோரில் இருந்து பல விஷயங்கள் இதில் அடங்கும். வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன், உங்கள் CIBIL ஸ்கோர் அல்லது கிரெடிட் ஸ்கோரைச் சரியாக இருக்க வேண்டும். இது தவிர, விண்ணப்பதாரரின் வயதும் வீட்டுக் கடனைப் பாதிக்கிறது, வயதுக்கு ஏற்ப, உங்கள் வீட்டுக் கடனை எவ்வளவு காலத்திற்குள் அடைப்பீர்கள் என்று கணக்கிடப்படுகிறது.
கூட்டு வீட்டுக் கடன் சிறந்த தீர்வு:
நீங்கள் வீட்டுக் கடன் (Home Loan) பெற, முதலில் உங்கள் CIBIL ஸ்கோரை மேம்படுத்த வேண்டும். இது தவிர, உங்கள் பெயரில் ஏற்கனவே கடன் இருந்தால், அதை விரைவில் செட்டில் செய்து, நீங்கள் வீட்டுக் கடனைப் பெறலாம். நீங்கள் கூட்டு வீட்டுக் கடனையும் எடுத்துக் கொள்ளலாம், இதனால் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் அதிக சிரமம் இருக்காது.
ALSO READ | Bank Facility: வங்கிக் கணக்கில் பணமே இல்லை! ஆனாலும் பணம் எடுக்கலாம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR