பனியால் சூழ்ந்த இடத்தில் குடிநீருக்கான குழாய் அமைப்பது எப்படி? watch the video

நீரின்றி உலகம் இயங்காது. அந்த நீரை மக்களின் வீடுகளுக்குக் கொடுப்பதற்காக, நீர் பனியாய் உறைந்திருக்கும் இமயமலைப் பகுதியில் பணியாளர்கள் வேலை செய்கின்றனர். அது தொடர்பான ஒரு சுவராசியமான வீடியோ காட்சி பதிவு இது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 7, 2021, 12:39 AM IST
பனியால் சூழ்ந்த இடத்தில் குடிநீருக்கான குழாய் அமைப்பது எப்படி? watch the video title=

நீரின்றி உலகம் இயங்காது. அந்த நீரை மக்களின் வீடுகளுக்குக் கொடுப்பதற்காக, நீர் பனியாய் உறைந்திருக்கும் இமயமலைப் பகுதியில் பணியாளர்கள் வேலை செய்கின்றனர். அது தொடர்பான ஒரு சுவராசியமான வீடியோ காட்சி பதிவு இது.

இமயமலை ஆறுகளில் ஒன்றான ஜீலம் ஆறு மட்டுமே காஷ்மீர் (Kashmir) பள்ளத்தாக்கு வழியே பாயும் பெரிய நதியாகும். சிந்து, தாப்பி, ராவி மற்றும் செனாப் என பல நதிகள் காஷ்மீரில் பாய்கின்றன. ஜம்மு மற்றும் காஷ்மீரில் பல பனியாறுகள் இருக்கின்றன. கடல் மட்டத்திலிருந்து சுமார் 5753 மீட்டர் உயரத்திலிருக்கும் உலகின் நீளமான இமயமலை பனியாறான சியாச்சென் பனியாறு சுமார் 70 கிலோமீட்டர் நீளம் உடையது.

ஆனால், நீர் வசதிகளை மக்களின் வீட்டிற்கு கொடுக்கும் முயற்சியில் பொது சுகாதார பொறியியல் மறுசீரமைப்புக் குழு கடினமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பனி (Ice) உறைந்திருக்கும் இடங்களில் ‘நீரோட்டத்தை’ கொடுக்க முயற்சிக்கின்றனர்.

குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள். மக்களுக்கு வீடுகளுக்கு குழாய் தண்ணீர் (Water) கொடுக்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். அது தொடர்பான வீடியோவை ஏ.என்.ஐ செய்தி ஏஜென்சி வெளியிட்டிருக்கிறது. 

(Video Source:  ஜல் ஜீவன் மிஷன்)

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!! 

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News