பிரபல இருசக்கர வாகன வாடகை நிறுவனமான ofo, தனது வாடகையினை இருமடங்காக உயர்த்தியுள்ளது!
சீனவை தலைமையிடமாக கொண்டு இயக்கும் பிரபல Bicycle வாடகை நிறுவனமான ofo, தற்போது சிங்கபூரில் தனது வாடகையினை இருமடங்காக உயர்த்தியுள்ளது.
முன்னதாக ofo நிறுவன Bicycle-களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வேண்டுமெனில் Bicycle-ன் பூட்டை திறக்க $0.50 மற்றும் அடுத்தடுத்து 30 நிமிடங்களுக்கு $0.50 வசூளிக்கப்படும். அதாவது., 30 நிமிட பயணத்திற்கு $1.00 வசூளிக்கப்படும்.
ஆனால் தற்போது இந்த கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் Bicycle-ன் பூட்டை திறக்க $0.50 மற்றும் அடுத்தடுத்து 15 நிமிடங்களுக்கு $0.50 வசூளிக்கப்படும். அதாவது., 30 நிமிட பயணத்திற்கு $1.50 வசூளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போல் 30 நாள் பாஸ் விலை $6.99-லிருந்து $8.99-ஆக உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ofo Bicycle சேவே தற்போது இந்தியாவில் இல்லை என்றபோதிலும் 6 மாதங்கள் முன்பு வரை இந்தியாவில் செயல்பாட்டில் தான் இருந்தது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தான் இந்த சேவை துவங்கப்பட்டது.
தமிழகத்தில் கோவையில் சுமார் 2000 வாடகை சைக்கில்களுடன் துவங்கப்பட்ட சேவை கடந்த ஜூலை மாதல் நிறுத்திக்கொள்ளப்பட்டது. வாடகைக்கு எடுத்துச்செல்லப்படும் சைகில்கள் திறும்பி வராமல் போனது தானா இதற்கான காரணம் என ofo தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.