How To Improve Your Credit Score: நீங்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து கடன் கேட்டு விண்ணப்பத்து இருந்தால், அந்த விண்ணப்பம் அங்கீகரிக்கப் படுவதும் அல்லது மறுக்கப் படுவதும் உங்கள் சிபில் ஸ்கோரைப் பொறுத்தது. ஒரு நல்ல சிபில் ஸ்கோர் விரைவான ஒப்புதலைப் பெறுவதற்கான வாய்ப்பாக அமைகிறது. அதே சமயம் அவசரமாகக் கடன் வாங்க நினைப்பவர்களுக்கு மோசமான சிபில் ஸ்கோர் ஒரு பெரிய தடையாக இருக்கிறது. எந்தவொரு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் அல்லது கிரெடிட் கார்டைப் பெறுவதற்கு நல்ல சிபில் ஸ்கோரை வைத்திருப்பது முக்கியம். எனவே நீங்கள் கடன் வாங்க வேண்டும் என்று நினைத்தாலே சிபில் ஸ்கோர் முக்கிய பங்காற்றுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சிபில் என்றால் என்ன? அந்த நிறுவனத்தின் பணி என்ன?
வங்கி மற்றும் கடன் அளிக்கும் நிறுவனங்களுக்கு தேவையான வாடிக்கையாளர்களின் தரவுகளை சேகரித்து கொடுக்கும் நிறுவனம் தான் சிபில். சிபில் என்பது Credit Information Bureau (India) Limited என்பதின் சுருக்கம் ஆகும். அனைத்து வங்கி மற்றும் கடன் தரும் நிறுவனங்கள் கடன் வாங்கியவர்களின் விவரங்களை சிபில் நிறுவனத்துக்கு கொடுத்து விடுவார்கள். அந்த தரவுகளை சிபில் நிறுவனம் ஆன்லைனில் பதிவேற்றிவிடும். அதை லாகின் செய்து அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோர் என்ன என்பதை அறிந்துக்கொள்ளும்.
மேலும் படிக்க - கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கான ‘சில’ முக்கிய காரணங்கள்!
ஒரு நல்ல சிபில் ஸ்கோர் என்றால் என்ன?
சிபில் ஸ்கோர் என்பது 300 முதல் 900 வரை இருக்கும். உங்கள் சிபில் ஸ்கோர் 30க்குள் இருந்தால், மிகவும் மோசமாக உள்ளது என்று பொருள், உங்களுக்கு கடன் கிடைப்பது சாத்தியமல்ல. உங்கள் சிபில் ஸ்கோர் 900க்கு அருகில் இருந்தால், அது உங்களுக்கு கடன்களைப் பெற உதவும். 300 முதல் 549 வரையிலான சிபில் ஸ்கோர் மோசமானதாகக் கருதப்படுகிறது, 550 முதல் 750 வரை இருந்தால் அது நியாயமானது எனவும், அதுவே 750 முதல் 900 வரை இருந்தால், அது ஒரு சிறந்த சிபில் ஸ்கோர் எனவும் மதிப்பிடப்படுகிறது.
உங்கள் சிபில் ஸ்கோர் எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்
நினைவூட்டல் அலர்ட் அவசியம்
நீங்கள் லோன் அல்லது கிரெடிட் கார்டு நிலுவைத் திருப்பிச் செலுத்துவதற்கான தேதியில் செலுத்த நீங்கள் தவறிவிட்டால், அது உங்கள் சிபில் ஸ்கோரை பாதிக்கும். அது உங்கள் சிபில் ஸ்கோர் குறைய வாய்ப்புள்ளது. மாதத் தவணை (EMI) அல்லது கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைகளை செலுத்தும் போது ஒருவர் சரியான நேரத்தில் திருப்பி செலுத்த வேண்டும், இல்லையென்றால் உங்கள் சிபில் ஸ்கோரில் கடுமையான வீழ்ச்சியை சந்திக்க நேரிடும். எனவே சரியான நேரத்தில் பணம் செலுத்த அதற்கான தொகையை முன்கூட்டியே வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் பணத்தை திருப்பி செலுத்தும் நாளை மறந்து விடுகிறீர்கள் என்றால் நினைவூட்டல் அலர்ட் வைத்துக்கொள்ளலாம். இதனால் நீங்கள் சரியான நேரத்தில் பணம் செலுத்தலாம்.
மேலும் படிக்க - வங்கி கணக்கு முடங்கிவிடும்... உடனடியாக ஆன்லைனில் இதை செய்யுங்க - முழு விவரம் இதோ!
நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்தவும்
உங்கள் சிபில் ஸ்கோரை மேம்படுத்த முக்கியமான செயல் உங்கள் நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்துவது. உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சரியான் நேரத்தில் தவறாமல் செலுத்தினால் உங்கள் சிபில் ஸ்கோர் கணிசமாக உயரும். உங்களால் முழுமையான கட்டணத்தை திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், குறைந்தபட்சம் கட்டணத்தையாவது செலுத்த முயற்சிக்கவும், இதனால் கார்டு வழங்குநர் நீங்கள் செலுத்தாததை பணியகத்திற்கு தெரிவிக்க மாட்டார்.
சிபில் தளத்தில் உள்ள தவறுகளை சரி செய்யவும்
நீங்கள் வாங்கிய கடன்களுக்கு சரியான நேரத்தில் பணத்தை திருப்பிச் செலுத்தி இருக்கலாம், நல்ல கிரெடிட் ஸ்கோரும் இருக்கலாம். ஆனால் உங்கள் சிபில் பட்டியலில் இருக்கும் சில தவறுகள் காரணமாக உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறையலாம். அதாவது சிபில் அறிக்கையில் இருக்கும் தவறான கணக்கு விவரங்கள், பணம் செலுத்த தாமதம், வங்கிக் கணக்குகள், இணை விவரங்கள், தனிப்பட்ட தகவல்கள் போன்றவை இருக்கலாம். ஆன்லைன் மூலம் உங்கள் குறைகளை சிபில் அமைப்புக்கு தெரிவிப்பதன் மூலம் தவறாக இருக்கும் தகவல்கள் அனைத்தையும் சரி செய்யலாம். அனைத்து தவறுகளும் சரி செய்யப்பட்டவுடன், உங்கள் கிரெடிட் ஸ்கோர் மேம்படலாம்.
மேலும் படிக்க - CIBIL: கடன் வாங்க ஐடியா இருக்கா? சிபில் ஸ்கோர் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ