ஆர்டிஓ ஆன்லைன் சேவைகள்: போக்குவரத்து அலுவலகம் தொடர்பான பெருமளவிலான பணிகளை ஆன்லைன் மூலம் செய்துக் கொள்ள அனுமதிக்கலாம் என போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு, வாகனப் பதிவு பரிமாற்றம் போன்ற அனைத்து முக்கிய வசதிகளும் இந்தச் சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ளன. உங்களிடம் கார் அல்லது எதாவது வாகனம் இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு முக்கியமானது. ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு, உரிமைப் பரிமாற்றம் போன்ற 58 முக்கியப் பணிகளுக்கான வசதியை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆன்லைனில் வழங்குகிறது. இந்த சேவைகள் அனைத்தையும் வீட்டில் அமர்ந்தபடியே செய்யலாம். அது எப்படி? தெரிந்துக் கொள்ளுங்கள்.
மொத்தம் 58 சேவைகளை ஆதார் சரிபார்ப்பு உதவியுடன் வீட்டில் இருந்தபடியே செய்துக் கொள்ளலாம். செய்யப்படும். அரசு அலுவலகத்திற்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் இதுபோன்ற சேவைகளை வழங்குவது குடிமக்களின் மதிப்புமிக்க நேரத்தை மிச்சப்படுத்தும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இன்று (2022, செப்டம்பர் 17 சனிக்கிழமை) தெரிவித்தது.
மேலும் படிக்க | கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. ஆஃபரில் எலக்டிரானிக்ஸ் பொருட்களை அள்ளலாம்
ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்பவர்களின் எண்ணிக்கை குறையும்
இது தவிர, வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்வோர் எண்ணிக்கையும் குறைவதால், பணியின் செயல்திறன் அதிகரிக்கும். ஆதார் சரிபார்ப்பைப் பெறக்கூடிய ஆன்லைன் சேவைகளில், ஓட்டுநர் உரிமம், நகல் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பித்தல் போன்ற சேவைகளும் அடங்கும்.
ஆதாரைத் தவிர அடையாள அட்டையையும் பயன்படுத்தலாம்
இது தவிர, சர்வதேச ஓட்டுநர் அனுமதி, நடத்துனர் உரிமத்தின் முகவரி மாற்றம், மோட்டார் வாகனத்தின் உரிமையை மாற்றுதல் போன்ற பணிகளையும் ஆன்லைனில் செய்யலாம். இதற்கு தானாக முன்வந்து ஆதார் அங்கீகாரத்தை மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பான அறிவிப்பை செப்டம்பர் 16ம் தேதி அமைச்சகம் வெளியிட்டது. ஆதார் எண் இல்லாத ஒருவர், வேறு சில அடையாளச் சான்றுகளைக் காட்டி நேரடியாக சேவைகளைப் பெறலாம்.
மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ உயர்வுக்கு முன்னர் ஊழியர்களுக்கு அரசு கொடுத்த நல்ல செய்தி
ஆதாரை இணைப்பதன் மூலம் உங்கள் ஓட்டுநர் உரிமத்தைப் பாதுகாக்கவும்
இது தவிர, உங்கள் ஓட்டுநர் உரிமத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதும் அவசியம். இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் தங்கள் ஆதாரை ஓட்டுநர் உரிமத்துடன் இணைக்கலாம், இதனால் பல வழிகளில் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கலாம், பல வகையான மோசடிகளைத் தடுக்கலாம்.
UIDAI இன் ஆதார் அடிப்படையிலான வழிகாட்டுதல்களின் உதவியுடன், உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் போலி அல்லது போலியான நகலை உருவாக்குவது கடினம். ஓட்டுநர் உரிமத்துடன் ஆதாரை இணைப்பதன் மூலம் நீங்கள் ஒரு புதிய DL ஐப் பெறலாம் அல்லது ஏற்கனவே உள்ள உரிமத்தைப் புதுப்பிக்கலாம். ஆதாருடன் ஓட்டுநர் உரிமத்தை இணைப்பதால் மேலும் பல நன்மைகளும் கிடைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ