கையில் காசே இல்லாமல் பயணம் செய்வது எப்படி? சூப்பரான எளிய வழிகள்...

Travelling Tips : நம்மில் பலருக்கு உலகை சுற்றி வர வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் கையில் காசே இருக்காது. அப்படி இருக்கையில், டிராவல் செய்வது எப்படி தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Sep 19, 2024, 05:19 PM IST
  • கையில் காசில்லாமல் பயணம் செய்யலாம்
  • எப்படி தெரியுமா?
  • சில ஈசியான டிப்ஸ்!
கையில் காசே இல்லாமல் பயணம் செய்வது எப்படி? சூப்பரான எளிய வழிகள்... title=

Travelling Tips : பயணம் செய்வது என்பது பலருக்கு அலாதியான பிரியமாக இருக்கும். எங்காவது தொலைந்து போய், மீண்டும் திரும்ப வர வேண்டும் என்பது அவர்களின் நோக்கமாக இருக்கும். பயணங்களில் பொதுவாகவே பல வகைகள் இருக்கின்றன. சிலர் பக்தி மார்க்கமாக கோயில்களுக்கு மட்டும் செல்வர். ஒரு சிலர், அட்டகாசமான சாகச பயணங்களை மட்டும் நோக்கி செல்வர். ஒரு சிலர் இரண்டும் இல்லாமல், இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை ஆராதிக்க மட்டும் செல்வர். எங்கு சென்றாலும் அங்கு கையில் இருக்கும் காசு, காற்று போல கரைந்து போகும் என்பதும் பலருக்கு தெரியும். கையில் காசே இல்லையென்றாலும் நாம் உலகத்தை பயணிக்க சில வழிகள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா?

வேலை பரிமாற்ற திட்டங்கள்: (Work Exchange Programs) 

இந்த திட்டம், பயணிகளை உதவி தேவைப்படும் இயற்கை பண்ணைகளுடன் இணைக்க வழி வகுக்கிறது. உணவு மற்றும் தங்குமிடத்திற்கு பதிலாக நீங்கள் பொதுவாக ஒரு நாளைக்கு சில மணிநேரம் வேலை செய்வீர்கள். நிலையான விவசாயத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும், அழகான கிராமப்புறங்களில் வாழவும் இது ஒரு சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது. 

இது, விவசாயத்திற்கு மட்டுமல்ல பிற தொழில்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்காகவும் இருக்கின்றன. இதற்கு, தனியாக பல இணையதளங்களும் இருக்கின்றன. அவை வழியாக பதிவு செய்து வெளிநாடுகள் அல்லது வெளியூர்களுக்கு கிளம்பலாம். 

Couchsurfing என்ற இணையதளம் இருக்கிறது. இவற்றின் மூலமாக, பயணம் செய்பவர்கள் உள்ளூர் மக்களுடன் கனெக்ட் செய்து கொள்ளலாம். இதன் மூலம், தங்குவதற்கு இலவசமாக இடங்கள் கிடைப்பது மட்டுமன்றி, பல சுற்றி பார்க்க நினைக்கும் இடங்களை டிராவல் கைட் வைத்துக்கொண்டு இலவசமாகவே சுற்றலாம். 

ஹிட்ச்ஹைக்கிங்:

Hitchhiking என்றால், பிற வண்டிக்களிடம் லிஃப்ட் கேட்டு வெவ்வேறு ஊர்களுக்கு செல்வதுதான். இது, பல சமயங்களில் பாதுகாப்பான பயணமாக இருக்காது. இதை வைத்து உலகம் முழுவதும் சுற்ற முடியாது என்றாலும், உள்ளூரிலும் நாட்டுக்குள்ளேயும் சுற்றலாம். இந்த முறையில் ஊற் சுற்ற உங்களுக்கு நன்றாக பேசும் திறமை இருக்க வேண்டும். 

குறைவான மூட்டை முடிச்சுகள்:

எங்கு பயணம் செய்தாலும், எவ்வளவு தூரம் சென்றாலும், உங்களுடன் குறைவான துணி-மணிகளை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். ஏதாவது ஒரு இடத்தில் நீங்கள் விமானத்தில் பயணிக்கும் நிலை வந்தால், உங்கள் பைகளுக்கென்று அதிகமாக காசு கொடுக்க வேண்டியதாக இருக்கும். அதே போல, லைட் வெயிட் தண்ணீர் பாட்டில், எடை குறைவான மெல்லிய ஆடைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். 

பொது போக்குவரத்து:

கையில் குறைவான காசுடன் பயணம் செய்கையில், உள்ளூர் பேருந்துகள், ரயில்கள், டிராம் உள்ளிட்ட பொது போக்குவரத்துகளை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம் ஆகும். டாக்ஸி, கேப் புக் செய்வதை விட்டுவிட்டு, இது போல நீங்கள் ஊர் சுற்றி பார்க்கையில் நல்ல அனுபவமும் கிடைக்கும். ஒரு சில ஊர்களில், இது போன்ற பயணிகளுக்கான அட்டைகள் வழங்கப்படுகின்றன. அவற்றை பயன்படுத்தலாம். 

மேலும் படிக்க | இரவில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு டிப்ஸ்! ஆபத்து வந்தால் என்ன செய்ய வேண்டும்?

தன்னார்வத் தொண்டு பணிகள்:

ஒரு சில நிறுவனங்கள், வேறு ஊர்களில் அல்லது வேறு நாடுகளில் ஊதியம் இன்றி குறிப்பிட்ட வேலை செய்ய ஆட்களை தேர்ந்தெடுக்கும். அது, பொது நலன் வேலையாக இருக்கலாம், ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்காக செய்யும் வேலையாக இருக்கலாம். ஆங்கிலம் கற்றுத்தருவதற்கு, காட்டு விலங்குகளை பாதுகப்பதற்ல்கு என பல்வேறு வேலைகளுக்கு இது போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆட்களை எடுக்கின்றன. 

ஒரு குழுவுடன் பயணம் செய்யுங்கள்:

நண்பர்கள் அல்லது ஏதேனும் ஒரு குழுவுடன் பயணம் செய்வது, நல்ல அனுபவத்தை தருவதோடு, உங்களது செலவுகளையும் அதிகமாக குறைக்கும். பல நகரங்களில் இலவச நடைப்பயணங்கள் உள்ளன. அங்கு உங்கள் அனுபவத்தின் அடிப்படையில் உங்கள் வழிகாட்டியைக் தேர்ந்தெடுக்கலாம். 

உள்ளூர் சந்தைகள்-தெருக்களில் விற்கும் உணவுகள்:

வெவ்வேறு ஊர்களுக்கு செல்லும் போது அங்கு ஹோட்டல்களிலிலேயே சாப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. அந்த ஊரின் மனம் உங்களுக்கு உண்மையாகவே கிடைக்க வேண்டும் என்றால் உள்ளூர் சந்தைகளை சுற்றி பார்த்து அங்கு தள்ளு வண்டிகளிலும், ரோட்டு கடைகளிலும் விற்கப்படும் உணவு பொருட்களை வாங்கி சாப்பிட வேண்டும். 

மேலும் படிக்க | வெளியூருக்கு பயணம் செய்யும் முன் இந்த மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News