Indian Railways: இந்தியன் ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில்வே நெட்வொர்க் ஆகும். இந்த நெட்வொர்க் மூலம் தினமும் 40 மில்லியன் பயணிகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கின்றனர். இந்தியன் இரயில்வே ஒவ்வொரு வகுப்பிற்கும் ஏற்ப வசதிகளை வழங்குவதோடு, தேவைப்படுபவர்களுக்கு கட்டணச் சலுகையையும் வழங்குகிறது.
மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு ரயில் பயணங்களில் கட்டணச் சலுகை கிடைக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் சில கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ரயில் பயண கட்டணத்தில் சலுகை கிடைக்கும் என்பதை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த தீவிர நோய்கள் என்ன, அவற்றுக்கு எவ்வளவு விலக்கு அளிக்கப்படுகிறது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
யாருக்கு தள்ளுபடி கிடைக்கும்?
காசநோயாளிகள்
இந்தியன் ரயில்வேயில் காசநோயாளிகளுக்கு ரயில் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அத்தகைய நோயாளிகள் முதல் வகுப்பு ஏசி, இரண்டாம் வகுப்பு ஏசி மற்றும் ஸ்லீப்பர்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கட்டணத்தில் 75 சதவீதம் தள்ளுபடி பெறுகிறார்கள். நோயாளியுடன் பயணம் செய்யும் உதவியாளரும் கட்டணத்தில் சலுகை பெறுகிறார்.
மேலும் படிக்க | குழந்தைகளுக்கு ரயில்வே அறிவித்த புதிய அப்டேட்: இதோ முக்கிய அப்டேட்
இதய நோயாளிகள் தங்கள் அறுவை சிகிச்சைக்காகவும், சிறுநீரக நோயாளிகள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அல்லது டயாலிசிஸிற்காகவும் சென்றால், அவர்களுக்கு ரயில்வே கட்டணத்தில் பெரும் தள்ளுபடி கிடைக்கும். அத்தகைய நோயாளிகளுக்கு ஏசி-3, ஏசி நாற்காலி கார், ஸ்லீப்பர், இரண்டாம் வகுப்பு மற்றும் முதல் ஏசி ஆகியவற்றில் 75 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். நோயாளியுடன், ஒரு பராமரிப்பாளரும் இந்த விலக்கின் பலனைப் பெறுகிறார்
புற்றுநோயாளிகளுக்கு இலவச டிக்கெட்!
புற்றுநோயாளிகள் சிகிச்சைக்காக எங்காவது சென்றால், ஏசி நாற்காலி வகுப்பில் 75% வரை தள்ளுபடி கிடைக்கும். ஏசி-3 மற்றும் ஸ்லீப்பரில் 100% சலுகை கிடைக்கும், அதாவது, அவற்றின் முழுக் கட்டணமும் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஏசி முதல் வகுப்பு, இரண்டாம் ஏசி வகுப்புகளுக்கு கட்டணத்தில் 50% தள்ளுபடி கிடைக்கும்.
இரத்த சோகை நோயாளிகளுக்கு ஸ்லீப்பர், ஏசி நாற்காலி கார், ஏசி-3 அடுக்கு மற்றும் ஏசி-2 அடுக்கு ஆகியவற்றில் 50% ரயில் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மறுபுறம், ஆஸ்டோமி நோயாளிகள் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசியில் மாதாந்திர மற்றும் காலாண்டு சிகிச்சைக்கான டிக்கெட்டுகளில் சலுகை பெறுகின்றனர்.
தொழுநோயாளிகளுக்கு சலுகை டிக்கெட்
தொற்று இல்லாத தொழுநோயாளிகளுக்கு ரயில் கட்டணத்தில் 75% தள்ளுபடி இரண்டாவது, ஸ்லீப்பர் மற்றும் முதல் வகுப்பில் ரயில்வேயில் பயணம் செய்ய வழங்கப்படுகிறது. அதே சமயம் எய்ட்ஸ் நோயாளிகள் சிகிச்சைக்கு செல்லும் போது, இரண்டாம் வகுப்பில் 50 சதவீதம் வரை சலுகை வழங்கப்படுகிறது.
ஹீமோபிலியா நோயாளிகளுக்கு இரண்டாம் வகுப்பு, ஸ்லீப்பர், முதல் வகுப்பு, ஏசி-3, ஏசி நாற்காலி கார் ஆகியவற்றில் 75 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். அத்தகைய நோயாளிகளுடன், மேலும் ஒருவருக்கு கட்டணச் சலுகையும் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | ரயில்வே ஸ்டேஷன் ஒன்று... ஆனால் மாநிலங்கள் இரண்டு... இந்தியாவின் வினோத ரயில் நிலையம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ