Farmers Scheme : தீபாவளி நெருங்கிக் கொண்டிருப்பதால் எல்லரும் போனஸ் எவ்வளவு கிடைக்கும் என கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், விவசாயிகளுக்கு மட்டும் தான் எந்தவித போனஸூம் இல்லை. மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்காக ஏதேனும் ஒரு மானிய திட்டத்தை அறிவித்தால் மட்டுமே அவர்களுக்கு அது போனஸ். அந்த வகையில் மத்திய அரசு விவசாயிகளுக்கு மிகப்பெரிய தீபாவளி போனஸ் செய்தியை வெளியிட்டுள்ளது. கோதுமை, பார்லி, கடுகு உள்ளிவைகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு திடீரென உயர்த்தி அறிவித்துள்ளது.
மோடி அரசின் தீபாவளி பரிசு
அதன்படி, கோதுமை MSP ஒரு குவிண்டாலுக்கு 2,425 ரூபாய் கிடைக்கும். பார்லியின் MSP ஒரு குவிண்டாலுக்கு ₹1,980 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 5,440 ரூபாயாக இருந்த பருப்பு விலை குவிண்டாலுக்கு ₹ 5,650 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. துவரம் பருப்பின் குறைந்தபட்ச விலை குவிண்டாலுக்கு ₹ 6,425 ஆக இருந்தது, ₹ 6,700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் கடுகு ஒரு குவிண்டாலுக்கு 5,650 ரூபாயாக இருந்த MSP விலை 5,950 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. குங்குமப்பூவின் MSP ஒரு குவிண்டாலுக்கு ₹ 5,940 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, இது முன்பு ₹ 5,800 ஆக இருந்தது. பிரதமர் மோடி அரசின் இந்த குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு அறிவிப்பு விவசாயிகளுக்கு தீபாவளி பரிசாக அமைந்துள்ளது.
இது தவிர கிராம புற விவசாயிகள் அறிந்து கொள்ளாத சில சூப்பரான திட்டங்களும் இருக்கின்றன. இந்த திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. அந்த திட்டங்கள் குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள். ஒருவேளை வடகிழக்கு பருமழை பெய்திருக்கும் நிலையில், இந்த திட்டத்தை பயன்படுத்தி மானியம் பெற்றுக் கொள்ள விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டு 2 நிமிடத்தில் டவுன்லோடு செய்வது எப்படி? முக்கிய டிப்ஸ்
விதை மானியத் திட்டம்
வேளாண் துறையின் முதன்மையான திட்டங்களில் ஒன்று விதை மானியத் திட்டம். இத்திட்டத்தின் கீழ், கோதுமை, நெல், உளுத்தம்பருப்பு, பட்டாணி மற்றும் கடுகு ஆகியவற்றுடன் காரீஃப் பயிர்களின் விதைகள் விவசாயிகளுக்கு 40% மானியத்தில் கிடைக்கும். இத்திட்டத்தை எந்த விவசாயியும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பம்பு செட் அமைக்க மானியம்
விவசாயிகளுக்கு பயிர்களுக்கு பாசனம் செய்ய டீசல் மற்றும் சோலார் பம்பிங் செட்களுடன் மின்சார பம்பிங் செட் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயனடைய விரும்பினால், விவசாயிகள் துறையின் இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு அருகில் இருக்கும் வேளாண்மை துறை அலுவலகத்துக்கு சென்று விசாரித்துக் கொள்ளுங்கள்.
கிசான் சம்மன் நிதி
கிசான் சம்மன் நிதி யோஜனா கீழ்த்தட்டு குடும்பங்களுக்காக வேளாண் துறையால் நடத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், ஆன்லைனில் விண்ணப்பிப்பதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளின் கணக்கில் ரூ.6,000 செலுத்தப்படுகிறது.
அக்ரி ஜங்ஷன் கடை திட்டம்
இத்திட்டத்தின் கீழ், 18 வயது முதல் 45 வயது வரை உள்ள எந்தவொரு விவசாயியும் உரம், விதை, பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை செய்யும் கடையைத் திறந்து, சொந்தமாகத் தொழில் செய்யலாம். அவர் விவசாயப் பாடத்தில் எம்எஸ்சி முடித்திருக்க வேண்டும். இதற்குப் பிறகு வேளாண்மைத் துறையிடம் பயிற்சி மற்றும் சான்றிதழ் பெற்று நேரடியாகப் பயன்பெறலாம்.
இந்த ஆவணங்கள் தேவைப்படும்
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க, ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் பாஸ்புக் கொடுக்க வேண்டும். விண்ணப்பத்தின் போது விவசாயி தனது மொபைல் எண் மற்றும் புகைப்படத்தையும் கட்டாயம் கொடுக்க வேண்டியிருக்கும்.
மேலும் படிக்க | உங்க வீட்டில் கரண்ட் இல்லையா? இனி பட்டனை தட்டுங்க போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ