ஐதராபாத்தை சேர்ந்த சாய் தேஜா என்ற இளைஞர் சாலை விபத்துக்களை தடுப்பதற்காக வாகனங்களில் பொருத்தக்கூடிய ஒரு புதிய ஆல்கஹால் டிடெக்டர் கருவியை கண்டுபிடித்துள்ளார்.
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள சாய் தேஜா (22) மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் சாலை விபத்துகளை தவிர்ப்பதற்காக இந்த கருவியை கண்டுபிடித்துள்ளார். அந்த வாகனத்தின் என்ஞ்சினில் பொருத்தப்படும் இந்த கருவி மூலம் டிரைவர் மது அருந்தி இருந்தால் அந்த வாகனம் இயக்க விடாமல் தடுத்துவிடும்.
இது குறித்து சாய் தேஜா கூறியதாவது, சில காரணங்களால் 10-ம் வகுப்பிற்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை. ஆனால் மிண்ணனு பொருட்கள் மீது எனக்கு ஆர்வம் அதிகம். இது குறித்து நான் இண்டெர்நெட் மூலம் அது பற்றிய அறிவை வளர்த்து கொண்டேன்.
புதிய ஆல்கஹால் டிடெக்டர் கருவியின் டிரைவர் 30 சதவீதத்திற்கு மேல் மது இருந்தி இருந்தால் என்ஞ்சினில் பொருத்தப்பட்டுள்ள இந்த கருவி வாகனத்தை ஸ்டார்ட் ஆக விடாமல் தடுக்கும். அந்த கருவியில் பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் நம்பருக்கு சம்பந்தப்பட்ட வாகன எண்ணுடன் SMS அனுப்பப்படும். இந்த கருவியில் முழுமையாக கண்டுபிடிக்க எனக்கு 15 நாட்கள் ஆனது. என்று அவர் கூறினார்.