இந்த 5, 10 ரூபாய் காயின் உங்ககிட்ட இருக்கா? லட்சம் லட்சமாய் அள்ளலாம்!!

Old Currency: உங்களிடம் அரிதான அல்லது சிறப்பு நாணயங்கள் அல்லது கரன்சி நோட்டுகள் இருந்தால், அவற்றை ஆன்லைனில் ஏலம் விட்டு, அதன் மூலம் எளிதாக பணம் ஈட்டலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 13, 2023, 06:41 PM IST
  • வீட்டில் இருந்தபடி பணம் ஈட்ட வேண்டுமா?
  • அதற்கு சில எளிய வழிகள் உள்ளன.
  • அவற்றில் ஒன்றுதான் பழைய நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை விற்று பணம் ஈட்டும் முறை.
இந்த 5, 10 ரூபாய் காயின் உங்ககிட்ட இருக்கா? லட்சம் லட்சமாய் அள்ளலாம்!! title=

கோடீஸ்வரராக வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது? ஆனால் அது அவ்வளவு எளிதா? அத்தனை சுலபமாக ஒருவரால் கோடீஸ்வரராகவோ லட்சாதிபதியாகவோ உயர்ந்துவிட முடியுமா? வீட்டில் இருந்தபடி பணம் ஈட்ட வேண்டுமா? அதற்கு சில எளிய வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் பழைய நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை விற்று பணம் ஈட்டும் முறை. ஆம்!! உங்கள் வீட்டில் முடங்கிக்கிடக்கும் பழைய நோட்டுகளும் நாணயங்களும் உங்களை பணக்காரர்களாக்கும் திறன் கொண்டவை. 

உங்களிடம் அரிதான அல்லது சிறப்பு நாணயங்கள் அல்லது கரன்சி நோட்டுகள் இருந்தால், அவற்றை ஆன்லைனில் ஏலம் விட்டு, அதன் மூலம் எளிதாக பணம் ஈட்டலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம். சந்தையில் பழைய 1, 2 ரூபாய் மற்றும் பழைய 1,2,5 ரூபாய் நாணயங்களின் தேவை அதிகரித்து வருகிறது. இவற்றில் சில நோட்டுகள் மற்றும் நாணயங்கள் ஆன்லைனில் ரூ.10 லட்சம் வரை விலை போகின்றன. 

உங்களிடம் அன்னை வைஷ்ணோ தேவி புகைப்படத்துடன் கூடிய ரூ.5 மற்றும் ரூ.10 நாணயங்கள் இருந்தால், ஒரு பெரிய தொகையை நீங்கள் ஈட்ட முடியும். இந்த நாணயங்கள் முதன்முதலில் 2002 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன.  மேலும் நாணயத்தில் அன்னை வைஷ்ணோ தேவியின் புகைப்படம் இருப்பதால், பலர் இதை மிகவும் மங்களகரமானதாக கருதுகிறார்கள். ஆகையால், பலர் இந்த நாணயத்தை 10 லட்ச ரூபாய் வரை செலுத்தி பெற்றுக்கொள்ள தயாராக உள்ளனர். 

இந்த நாணயத்துக்கு தேவை அதிகம் இருப்பதால், இதை விற்பதற்கு ஆன்லைன் ஏல முறையும் இருக்கக்கூடும். 

மேலும் படிக்க | Jackpot! இந்த ₹1 நாணயம் உங்க கிட்டே இருக்கா... 10 கோடி ரூபாயை அள்ளலாம்!

தேவையில் உள்ள வேறு சில ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களின் விவரம் இதோ

- 1957ல் கவர்னர் எச்.எம்.படேலின் கையொப்பத்துடன் கூடிய 1 ரூபாய் பழைய நோட்டு. இந்த நோட்டின் வரிசை எண் 123456.

- ஓஎன்ஜிசியின் ரூ.5 மற்றும் ரூ.10 நினைவு நாணயங்கள்

- ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் டி சுப்பாராவ் கையொப்பத்துடன் 000 786 என்ற தனித்துவமான எண் வரிசையில் உள்ள 100 ரூபாய் நோட்டுகள்.

- ரிசர்வ் வங்கி கவர்னர் சிடி தேஷ்முக் கையெழுத்திட்ட 1943 இன் ரூ.10 நோட்டு. அந்த நோட்டின் ஒருபுறம் அசோகர் தூணும் மறுபுறம் படகும் அச்சிடப்பட்டிருக்கும்.

பழைய பொருட்களை வாங்கும், விற்கும் பணிகளை செய்யும் பல தளங்களில் இந்த நாணயங்கள் மற்றும் நோட்டுகளை ஆன்லைனில் விற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இணையதளங்களில் உங்களைப் பதிவு செய்துகொண்டு, உங்கள் பொருட்களை விற்று பணம் ஈட்டலாம்.

ஆகஸ்ட் 2020 இல், இந்திய ரிசர்வ் வங்கி (RBI), கரன்சி நோட்டுகள் மற்றும் நாணயங்கள் ஆன்லைனில் வாங்கப்படுவது மற்றும் விற்கப்படுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த அறிக்கையில், “ரிசர்வ் வங்கியின் பெயர்/லோகோவைப் பயன்படுத்தி,  பல்வேறு ஆன்லைன்/ ஆஃப்லைன் தளங்களில் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களின் வாங்குதல் மற்றும் விற்பது தொடர்பான பரிவர்த்தனைகளில், பொதுமக்களிடம் இருந்து கட்டணங்கள்/கமிஷன்/வரி என சில தனிமங்கள் மோசடியில் ஈடுபடுவது இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்துள்ளது." என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

ஆகையால் ஆன்லைனில் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை வாங்கும் / விற்கும் போது பொது மக்கள் அதிகபட்ச கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

(பொறுப்புத் துறப்பு: ஜீ தமிழ் நியூஸ் பழைய நாணயங்கள் அல்லது வங்கி நோட்டுகளை ஆன்லைனில் வாங்குவதையும் விற்பதையும் ஊக்குவிக்கவில்லை. இந்த செய்தி வெறும் தகவலுக்காக மட்டுமே பகிரப்பட்டுள்ளது)

மேலும் படிக்க | உங்களிடம் இந்த 100 ரூபாய் நோட்டு இருந்தால் உங்களுக்கு ஜாக்பாட் தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News