8வது ஊதியக் குழுவின் சமீபத்திய செய்திகள்: சமீபகாலமாக மத்திய ஊழியர்களுக்கு (Central government employees) பெரும் செய்தி வெளியாகி வருகின்றது. அதன்படி ஊழியர்களின் அகவிலைப்படி மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், மீண்டும் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கும் என்று AICPI யின் எண்ணிக்கை மூலம் தெரிகிறது. ஆனால் இதற்கிடையில் தற்போது 8வது ஊதியக் குழு பற்றி விவாதம் நடந்து வருகிறது. அதே நேரத்தில், புதிய ஊதியக் குழு குறித்தும் அரசு திட்டங்களை வகுத்துள்ளது, வரும் காலங்களில், புதிய ஃபார்முலா அடிப்படையில் மத்திய ஊழியர்களின் சம்பள உயர்வு இருக்கும். தற்போது அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் அடிப்படையில் சம்பளம் வழங்கி வருகிறது. ஆனால் 8வது ஊதியக் குழுவில் ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. 8வது ஊதியக்குழு எப்போது வரும் என்று அரசு இறுதியாக கூறி வந்ததிகளுக்கு முற்றிப்புள்ளி வைத்துள்ளது.
8வது ஊதியக் குழுவை அரசு விரைவில் அமல்படுத்தலாம் என்று கடந்த சில நாட்களாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது 8வது ஊதியக்குழு தொடர்பான தகவலை அரசு அளித்துள்ளது, அதன்படி வரவிருக்கும் புதிய கமிஷன் தொடர்பாக என்ன விவாதம் நடந்து வருகின்றது என்று நிதியமைச்சர் பங்கஜ் சவுத்ரி சமீபத்தில் ராஜ்யசபாவில் விளக்கியுள்ளார்.
மேலும் படிக்க | ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்! 18 மாத டிஏ நிலுவைத் தொகை.. முக்கிய அப்டேட் இதோ
8வது சம்பள கமிஷன் பற்றி எந்த யோசனையும் இல்லை
இந்நிலையில் ராஜ்யசபாவில் 8வது ஊதியக்குழு தொடர்பான நிலவரத்தை விளக்கிய பங்கஜ் சவுத்ரி, தற்போது இது குறித்து எந்த திட்டமும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் சம்பள கமிஷன் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அமைக்கப்படுகிறது. இதனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு இது குறித்து விவாதிப்பது சரியல்ல. இதனுடன், அதைப் பரிசீலிக்கும் திட்டமும் இப்போதைக்கு இல்லை என்றார். மேலும் கூறிய அவர், வரும் காலத்தில் பர்ஃபார்மன்ஸ் அடிப்படையிலான முறையை கொண்டு வர மத்திய அரசு திட்டம் வகுத்து வருகிறது. ஆனால் அது எப்போது வரும் என்பதை இப்போது கூறுவது சரியல்ல என்றார்.
புதிய பார்முலாவை உருவாக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது
கடந்த 2016ஆம் ஆண்டு 7வது ஊதியக் குழுவை (7th Pay Commission) மத்திய அரசு அமல்படுத்தியது. இப்போது 7 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அறிக்கையின்படி, மத்திய ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்ய 8வது ஊதியக் குழுவை அமைக்கும் எண்ணம் இல்லை. ஆனால் இதையும் மீறி புதிய ஃபார்முலா தயாராகி வருகிறது. எனவே மத்திய ஊழியர்களின் சம்பளம் ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயிக்கப்படும்.
ரேட்டிங்கிற்கு ஏற்ப சம்பளம் அதிகரிக்கும்
பர்ஃபார்மன்ஸ் அடிப்படையிலான அமைப்பில், ஊழியர்களுக்கு அவர்களின் பணிக்கு ஏற்ப மதிப்பீடு கிடைக்கும், அதன் அடிப்படையில் சம்பளம் உயர்த்தப்படும். ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், சலுகைகளை மற்றும் ஓய்வூதியத்தின் கட்டமைப்பை மாற்ற புதிய கமிஷன் அமைக்க தேவையில்லை.
எந்த அடிப்படையில் சம்பளம் மறுஆய்வு செய்யப்படும்?
மறுபுறம் அனைத்து கொடுப்பனவுகள் மற்றும் சம்பளங்கள் Aykroyd ஃபார்முலாவின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்யப்படலாம் என்று நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி ஒருமுறை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் அப்டேட்: 46% அகவிலைப்படி.. இந்த நாளில் வரும் அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ