Procedure to link PAN number with LIC Policy: நீங்கள் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (LIC) ஏதேனும் பாலிசியை எடுத்திருந்தால், இது உங்களுக்கு பயனுள்ள செய்தியாக இருக்கும். தங்கள் பான் கார்டை இன்னும் எல்ஐசி பாலிசியுடன் இணைக்காதவர்கள் அதை விரைவில் செய்து முடிக்க வேண்டும்.
எல்ஐசி (LIC) ஒரு ட்வீட் மூலம் டில் இந்த விஷயம் பற்றிய தகவலை அளித்துள்ளது. எல்ஐசி தனது ட்வீட்டில், 'இப்போது உங்கள் எல்ஐசி பாலிசியுடன் உங்கள் பான் எண்ணை இணைக்கவும்!' என்று எழுதியுள்ளது. இதனுடன், https://licindia.in/Home/Online-PAN-Regcription என்ற இணைப்பையும் எல்ஐசி பகிர்ந்துள்ளது. இதனுடன், வாடிக்கையாளர்கள் எந்தவிதமான பிரச்சினையையும் எதிர்கொள்ளாமல் இருக்க இந்த முழு செயல்முறையின் வீடியோவைவும் எல்ஐசி பகிர்ந்துள்ளது.
Link your PAN to your LIC policies now!
Log on to https://t.co/fA1vgvFfeK pic.twitter.com/4DUp0xSRdc— LIC India Forever (@LICIndiaForever) September 7, 2021
நீங்கள் எல்ஐசியின் பாலிசியின் (LIC Policy) வாடிக்கையாளராக இருந்தால், இந்த முழு செயல்முறையையும் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
ALSO READ: ஆதார் – பான் இணைப்பு தொடர்பாக மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!!
ஆதார் உடன் பான் கார்டை எப்படி இணைப்பது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
- எல்ஐசி பாலிசியை ஆதார் (Aadhaar) உடன் இணைக்க, பான் எண் மற்றும் பாலிசி எண்ணை உங்களுடன் வைத்திருங்கள். இதனுடன், உங்கள் பாலிசி எண் மொபைலுடன் கண்டிப்பாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- முதலில் நீங்கள் எல்ஐசியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- அதன் முகப்புப் பக்கத்தின் 'Online Service'-ல் கிளிக் செய்யவும்.
- பின்னர் 'Online PAN Registration'-ல் கிளிக் செய்யவும்.
- அதன் பிறகு ஒரு புதிய பக்கம் உங்கள் முன் திறக்கும்.
- இங்கே நீங்கள் 'Proceed' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- பிறந்த தேதி, பாலினம், மின்னஞ்சல் ஐடி, பான், முழு பெயர், மொபைல் எண், பாலிசி எண் போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே நிரப்பவும்.
- பின்னர் கேப்டாவை இங்கே நிரப்பவும்.
- பின்னர் நீங்கள் 'Get OTP' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும்.
- OTP Verify செய்யவும்.
- உங்கள் verification வெற்றிகரமாக நடந்தவுடன் உங்கள் பாலிசி ஆதார் உடன் இணைக்கப்பட்டு விட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ALSO READ: PAN Card: எந்த ஆவணமும் கொடுக்காமல், இலவசமாக பான் அட்டை பெறலாம், வழிமுறை இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR