தமிழகத்தில் இலவச மற்றும் மானிய விலையில் மின்சாரம் பெற மின் கட்டண எண்ணுடன் ஆதார் கார்டை இணைக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 2.36 கோடி நுகர்வோர்கள், 21 லட்சம் விவசாய இணைப்புகள், கைத்தறி மற்றும் விசைத்தறி போன்ற தொழில்களுக்கும், முதல் 100 யூனிட்களை இலவசமாகப் பெறும் மக்கள் என அனைவரும் மின் கட்டண எண்ணுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 6ம் தேதி அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில் ஆதார் கார்டு வைத்திருக்காதவர்கள் உடனே ஆதார் எண்ணை பெற வேண்டும் என்றும், புதிய ஆதார் கார்டு வரும்வரை பாஸ்புக், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு போன்ற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாளத்தையோ அல்லது புதிய ஆதார் பதிவு செய்ததற்க்கான அடையாளத்தையோ சமர்ப்பித்து மானியத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | தமிழகத்தில் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
இதுவரை அரசு ஆதார் அட்டையை வங்கி கணக்குடன், ஆதார் அட்டையை பான் கார்டுடன், ஆதார் அட்டையை மொபைல் நம்பருடன், ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் என பல்வேறு முக்கியமான ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என அறிவித்து அந்த செயல்முறைகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது அரசு மின்சார கட்டண எண்ணுடன் ஆதார் அட்டையை இணைக்க வலியுறுத்தியுள்ளது. அரசின் நிதியிலிருந்து வழங்கப்படும் இந்த மானிய திட்டத்தை அரசு ஆதார் சட்டம் 7வது பிரிவின் கீழ் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மின்சார வாரியம் தெரிவிக்கையில், வாரியம் அதன் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் இன்னும் சில தினங்களில் 'நுகர்வோர் தகவல்' என்பதன் கீழ் ஒரு லிங்கை வழங்கும், அதில் மக்கள் தங்கள் ஆதார் எண்களை பதிவு செய்யலாம். பதிவு செய்ததும் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும், மேலும் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் போது மக்கள் ஆதார் எண் மற்றும் ப்ரொபைலை அப்டேட் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் பெரும்பாலான மக்களின் ஆதார் அட்டை இணைக்கப்பட்டுவிடும் என்றும் அரசு கூறியுள்ளது. ஆனால் இது வாடகை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு சுமையாக இருக்கும் என்று சில அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | பான் கார்டு வைத்திருப்போர் கவனதிற்கு! இதை உடனடியாக செய்யுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ