ரேஷன் கார்டுதாரர்களுக்கு லாட்டரி, இந்த பொருட்களை இனி இலவசமாக பெறுங்கள்

Ration Card Latest News: ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி. இலவச ரேஷன் திட்டத்தை நீங்களும் பயன்படுத்திக் கொண்டி இருந்தால் அரசாங்கம் உங்களுக்காக மற்றொரு சிறப்புத் திட்டத்தைத் வழங்க உள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 23, 2023, 11:00 AM IST
  • கோதுமை மற்றும் அரிசியுடன் இந்த பொருட்களும் இலவசமாக கிடைக்கும்.
  • இலவச ரேஷன் குறித்து வெளியான முக்கிய செய்தி.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு லாட்டரி, இந்த பொருட்களை இனி இலவசமாக பெறுங்கள் title=

இலவச ரேஷன் திட்டம்: ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி உள்ளது. அதன்படி இலவச ரேஷன் திட்டத்தை நீங்களும் பயன்படுத்திக் கொண்டு இருந்தால், அரசாங்கம் உங்களுக்காக மற்றொரு சிறப்புத் திட்டத்தைத் உருவாக்கி உள்ளது. அந்தவகையில் இந்த சிறப்புத் திட்டத்தின் படி இனி இலவச கோதுமை, அரிசி தவிர மற்ற பொருட்களையும் இலவசமாக வழங்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மற்ற பொருட்களையும் நீங்கள் மிகக் குறைந்த விலையில் பெறலாம்.

23 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்
உணவுத்துறை அமைச்சரிடம் இருந்து கிடைத்த தகவலின் படி, மத்திய அரசுடன், மாநில அரசும் பல வகையான வசதிகளை செய்து தருகிறது. இந்நிலையில், உத்தரகாண்ட் அரசு 23 லட்சம் குடும்பங்களுக்கு இலவச ரேஷன், சர்க்கரை மற்றும் உப்பு தவிர பிற பொருட்களையும் குறைந்த விலையில் வழங்க திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க | இந்த 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்!

65 லட்சம் கோடி கூடுதல் செலவு
இது குறித்து உத்தரகாண்ட் மாநில உணவுத் துறை அமைச்சர் அளித்து கூடுதல் தகவலின் படி, இந்தத் திட்டத்துக்கான பட்ஜெட் திட்டத்தையும் தயாரித்துள்ளது. மேலும் இந்த பட்ஜெட் விவரம் அமைச்சரவையில் முன்வைக்கப்படும். அதன்பின் இத்திட்டத்தை அமல்படுத்திய பிறகு, மாநில அரசுக்கு கூடுதலாக 65 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கும் என்றார்.

அனைத்து அத்தியாவசிய பொருட்களும் ஏழைகளுக்கு வழங்க முயற்சி
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உணவுத் துறை அமைச்சர், 2023-ம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு இலவச ரேஷன் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு முழுவதும், பயனாளிகளுக்கு இலவச ரேஷன் பலன் கிடைக்கும். அத்துடன் ஒவ்வொரு சமையலறையிலும் கோதுமை மற்றும் அரிசி மற்றும் சர்க்கரை மற்றும் உப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் இருக்க வேண்டும் என்று மாநில அரசு விரும்புகிறது.

சர்க்கரைக்கு மானியம் வழங்கப்படும்
இதனிடையே சர்க்கரைக்கு மானியம் வழங்கப்படம் என்றும் அவர் கூறியுள்ளார், அதன்படி சர்க்கரைக்கு கிலோவுக்கு ரூ.10 மானியம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது இதை ரூ.15 வரை உயர்த்தலாம். இதனுடன், கடந்த 6 மாதங்களாக ரேஷன் கார்டுகளில் ரேஷன் எடுக்காத அனைத்து அட்டைதாரர்களின் அட்டைகளையும் ரத்து செய்யப் படலாம் எனவும் மாநில அரசு தகவல் அளித்துள்ளது.

மேலும் படிக்க | திருப்பதி செல்லும் பக்தர்கள் இதை தெரிஞ்சுக்காம போகாதீங்க..! கட்டணங்கள் உயர்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News