இந்த 3 கிரகங்களை சந்தோஷப்படுத்தினால் புத்தாண்டில் கவலையே இருக்காது

இந்த புத்தாண்டை மகிழ்ச்சியாகவும் மறக்கமுடியாததாகவும் மாற்ற விரும்பினால், இந்த 3 கிரகங்களை திருப்திப்படுத்தினால் போதும்...   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 2, 2022, 11:21 AM IST
  • கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுவது சூரியன்
  • கிரகங்களின் தளபதி செவ்வாய்
  • மனக் காரகன் சந்திரன்
இந்த 3 கிரகங்களை சந்தோஷப்படுத்தினால் புத்தாண்டில் கவலையே இருக்காது title=

புதுடெல்லி: ஜோதிடத்தின் பார்வையில் 2022ம் ஆண்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் சூரியன், செவ்வாய், புதன் ஆகிய ராசிகள் மாறப்போகின்றன. இது தவிர, கர்ம பலன்களைத் தரும் சனிதேவரும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கியமான சஞ்சாரத்தை நடத்தவிருக்கிறார்.

ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுவது சூரியன். கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் மற்றும் மனக் காரகன் சந்திரன். புத்தாண்டில் இந்த மூன்று கிரகங்களையும் மகிழ்விப்பதன் மூலம், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த 3 கிரகங்களையும் எப்படி மகிழ்ச்சிப்படுத்துவது தெரியுமா?  

சூரியன்
ஜாதகத்தில் சூரியன் கிரகம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சூரியன் சுபமாக இருக்கும்போது வாழ்க்கையில் புகழ், பதவி உயர்வு, வேலையில் உயர்வு கிடைக்கும். ஜாதகத்தில் சூரியன் பலவீனமாக இருந்தால், வேலை தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்படும்ம். சூரியனை வலுப்படுத்த, தினசரி காலையில் சூரிய நமஸ்காரம் செய்யவேண்டும். அதோடு, ஆதித்ய ஹிருதய் ஸ்தோத்ரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

ALSO READ | 2022 இல் வேலை, தொழிலில் வெற்றி கொடி நாட்ட உள்ள ராசிகள் இவர்களே

சந்திரன்
ஜோதிடத்தில், சந்திரன் மனதின் செயல்பாடுகளுக்கு காரணமானவர் என்று கருதப்படுகிறது. மனதில் தெளிவு ஏற்பட, சந்திரன் சுபமாக இருப்பது மிகவும் அவசியம். ஜாதகத்தில் சந்திரன் (Zodiac Signs) அசுபமாக இருப்பதால் மன உளைச்சலை சந்திக்க நேரிடும்.

இது தவிர, மனச்சோர்வு பிரச்சனையும் ஏற்படும். சந்திர தோஷம் கையில் முத்து பொதித்த  வெள்ளி மோதிரத்தை அணியுங்கள். மாத சிவராத்திரி அன்று சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்யவும்.

செவ்வாய்
செவ்வாயின் அருளால் வாழ்க்கையில் தைரியமும் வீரமும் நிலைத்திருக்கும். எந்த ஒரு வேலையிலும் தைரியம் இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமாக இருப்பதால் தைரியம், தன்னம்பிக்கை குறையும். 

எனவே, செவ்வாய் கிரகத்தை வலுப்படுத்த, செவ்வாய்கிழமையன்று சுந்தரகாண்டம் பாராயணம் செய்ய வேண்டும். செவ்வாய்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபட்டு, லட்டை நைவேத்தியம் செய்து அதை அனைவருக்கும் பிரசாதமாக விநியோகிக்கவும்.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்வல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | 2022-ல் அமையவுள்ளன அட்டகாசமான 4 யோகங்கள்: இந்த ராசிக்காரர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News