இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அம்மாக்களுக்கான கிப்ட்களை வாங்கிக்கொடுத்து சர்ப்ரைஸ் செய்து வருகின்றனர். இதையடுத்து, எக்ஸ்ட்ரா ஸ்பெஷலாக இந்த ரெசிப்பிக்களை செய்து கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுங்கள்.
சீஸி ஃப்ரைஸ்:
தேவையான பொருட்கள்:
- ஃபிரெஞ்சு ஃப்ரைஸ்-160 கிராம்
- கவுடா சீஸ் மையோ
- மோட்ஸரெல்லா மற்றும் செட்டர் சீஸ்
- சில்லி ஃப்ளேக்ஸ்
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
- ஃபிரஞ்சு ஃபிரைக்களை எடுத்துக்கொண்டு பொன் நிறத்தில் வரும் வரை வருக்கவும்.
- வருத்து எடுத்தவற்றை உப்புடன் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
- ஒரு தட்டில் கவுடா சீஸ் மையோ, மாட்ஸரெல்லா மற்றும் செட்டார் சீஸுடன் பாதி ஃபிரஞ்சு ஃப்ரைஸ்களை சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
- பிறகு, சில்லி ஃப்ளேக்ஸை மேலே தூவி பரிமாறுங்கள்.
மேலும் படிக்க | ரயில்வே டிக்கெட்டை வேறொருவரின் பெயருக்கு மாற்ற முடியுமா.. விதிகள் கூறுவது என்ன...!
மாம்பழ குல்ஃபி:
தேவையான பொருட்கள்:
- 2 கப் பால்
- அரை கப் சுண்டக்காச்சிய பால் (condensed milk)
- கால் கப் பால் பவுடர்
- 2 ஏலக்காய்
- பிஸ்தா மற்றும் பாதாம்
- தேவையான அளவு சர்க்கரை
- தண்ணீர்
- மாம்பழ கூழ் (Mango Pulp)
- பால் பவுடர் 1 கப்
- மில்க் மெய்ட் 1 கப்
- வெட்டி வைத்த பிஸ்தா
- வெட்டி வைத்த பாதாம்
செய்முறை:
- அரை கப் தண்ணீரை தவாவில் காய வையுங்கள்
- தண்ணிர் காய்ந்த பிறகு பால் பவுடரை சேர்த்து கிளறிக்கொண்டேயிருங்கள்
- மில்க் மெய்டை கலந்து நன்கு கிளருங்கள்.
- நன்கு கிளறிய பிறகு, மாம்பழ கூழை போட்டு கிளறுங்கள்.
- இதையடுத்து, இப்படியே 1 நிமிடத்திற்கு கிளறவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு, அடுப்பிலிருந்து கடாயை இறக்குங்கள்.
- அதை, நன்கு ஆர வைத்து குல்ஃபி கப் அல்லது ஒரு டம்ளரில் ஊற்றி வையுங்கள்.
- ஊற்றி வைத்த அந்த மாம்பழ குல்ஃபியை ஒரு நாள் முழுவதும் ஃப்ரீஸரில் வையுங்கள்.
- ஒரு நாள் ஆன பிறகு, அதை குளிர்சாதன பெட்டியிலிருந்த எடுத்து, வெட்டி வைத்த பிஸ்தா மற்றும் பாதாமை தூவிவிடுங்கள்.
- இதை அப்படியே எடுத்து சாப்பிட்டீர்களென்றால், சுவையான மாம்பழ குல்ஃபி ரெடி.
பாேண்டா:
செய்முறை:
- பெரிய போண்டாவை, அதன் தோளை நீக்கி நீளமாக வெட்டிக்கொள்ளுங்கள்.
- கடலை மாவு, உப்பு, மிளகாய்த்தூள், கோதுமை மாவு, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள்.
- பிசைந்த மாவை உருண்டையாக பிடித்து கொள்ளுங்கள்.
- கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக காய விடுங்கள்.
- எண்ணெய் நன்றாக சூடேறிய பின்னர் தீயை குறைவான அளவில் வைத்து போண்டாவை சுட்டு எடுக்கவும்.
- சுட சுட போண்டாவை அதற்கு ஏற்ற சைட் டிஷ் உடன் சுவையுங்கள்.
கேக்:
தேவையான பொருட்கள்:
- வாழைப்பழம்
- மெல்ட் செய்த பட்டர்
- நாட்டுச்சர்க்ரை
- எண்ணெய்
- கேக் செய்யும் மாவு
- பேக்கிங் சோடா
- பேக்கிங் பவுடர்
- பால்
- க்ரிம் சீஸ்
- ஐஸிங் சுகர்
செய்முறை:
- முதலில், வாழைப்பழம், பால் மற்றும் நாட்டு சர்க்கரையை ஆகியவை பேஸ்ட் போல் வரும் வரை கலக்கவும்.
- அடுத்து, வாழைப்பழ பேஸ்ட்டில் மாவு, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்க்கவும்.
- சிறிதளவு எண்ணெய் ஊற்றி, வெண்ணெயை மெல்ட் செய்து கலக்குங்கள்.
- கேக் செய்ய பயன்படுத்தும் ovenஐ முன்கூட்டியே சூடுபடுத்திக்கொள்ளுங்கள்.
- அதில், கேக்கை 180 டிகிரி செல்சியஸில் சுமார் 20 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
- பிறகு கேக்கை ஆற வைக்கவும்.
- ஐசிங் சுகர், சீஸ் க்ரீம் சேர்த்து டெக்கரெட் செய்யவும்.
- சுவையான முட்டை கலக்காத கேக் தயார்.
மேலும் படிக்க | Mothers Day 2023: அம்மாவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஃபைனான்சியல் டிப்ஸ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ